மீண்டும் முத்தலாக் மசோதாவை அமல்படுத்த துடிக்கும் பாஜக!

0

இஸ்லாமிய பெண்கள் பாதுகாப்பு மசோதா எனப்படும் மூன்று முறை தலாக் கூறி விவாகரத்து செய்யும் முத்தலாக் முறை தண்டனைக்குரிய குற்றமாக அறிவிக்கும் மசோதாவை கடந்த ஆண்டு  நாடாளுமன்றத்தில் நிறைவேறியது. ஆனால் இந்த மசோதாவை நிலைக்குழுவிற்கு அனுப்பி மறுபரிசீலனை செய்யவேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியதால் மாநிலங்களவையில் இந்த மசோதா நிறைவேறவில்லை. கடந்த ஓராண்டுக்குள், முத்தலாக் தடை மசோதாவை பலமுறை அவசர சட்டமாக அமல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், வருகின்ற நாடாளுமன்றக் கூட்ட தொடரில் முத்தலாக் மசோதாவை மீண்டும் அறிமுகப்படுத்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த முறை மாநிலங்களவையில் முத்தலாக் மசோதா நிச்சயம் நிறைவேற்றப்படும் என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.

Comments are closed.