மேவாத் முஸ்லிம் பெண்களின் கூட்டு பலாத்காரம் ஒரு சிறிய பிரச்சனை: முதல்வர் மனோகர்லால் கட்டார்.

0

பா.ஜ.க ஆளும் ஹரியானா மாவட்டத்தின் முதலமைச்சரான மனோகர் லால் கட்டார், மேவாத்தில் மாட்டிறைச்சி உண்டார்கள் என்று கூறி முஸ்லிம் பெண்கள் கற்பழிக்கப்பட்டதும், அவர்களது குடும்பத்தினர் இருவர் கொலை செய்யப்பட்டதும், பிரியாணியில் மாட்டிறைச்சி கலந்துள்ளதா என்று சோதனைகள் நடத்தப்பட்டதும் சிறிய விஷயங்கள் தான் என்று கூறியுள்ளார்.

ஹரியானாவின் 50  வருடங்கள் என்ற நிகழ்ச்சி ஒன்றில், மேவாத் கற்பழிப்பு மற்றும் இரட்டை கொலை வழக்குகளில் சி.பி.ஐ விசாரணை நடத்தப்படுமா என்று கட்டாரிடம் கேள்வி எழுப்பப்பட்ட போது, “இவை எல்லாம் பிரச்சனைகளே அல்ல. இது போன்ற சிறிய விஷயங்களில் நான் என் கவனத்தை செலுத்துவதில்லை. இன்று நாம் ஸ்வர்ண ஜெயந்தி பற்றி பேசிக் கொண்டிருக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.

மீண்டும் இது குறித்து கேள்வி எழுப்பட்ட போது, “பொன்விழா கொண்டாட்டங்களை ஒப்பிடும் போது இவை சிறிய பிரச்சனைகள் தான், இவை நாட்டில் எங்கு வேண்டுமானாலும் நடக்கலாம்” என்று கூறியுள்ளார்.

மேவாத்தில் கடந்த ஆகஸ்ட் 24 ஆம் தேதி 20 வயது முஸ்லிம் பெண்ணும் அவரது 14 வயது உறவினர் சிறுமியும் பசு பாதுகாவலர்களால் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டனர். அதோடு அந்த பசு பாதுகாவலர்கள் அவரது உறவினர் இருவரை கட்டிவைத்து அடித்துக் கொலை செய்தனர். (பார்க்க செய்தி)

இந்நிகழ்வு குறித்து பல ஊடகங்கள் மெளனம் சாதித்து வந்தன என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது மாநில முதல்வரின் இந்த கருத்து சிறுபான்மையினர் நலன் குறித்தும், பெண்கள் பாதுகாப்பு குறித்தும், சட்டம் ஒழுங்கு குறித்தும் அவர் எவ்வளவு அக்கறை கொண்டுள்ளார் என்பதை வெளிப்படுத்தியுள்ளது.

Comments are closed.