முகல்சராய் ரயில்நிலைய பெயர் மாற்றத்திற்கு மத்திய அரசு ஒப்புதல்

0

உத்திர பிரதேச மாநிலத்தில் பாஜக ஆட்சி அமைந்ததும் பாஜக தரப்பில் இருந்து வெளியான அறிவிப்புகளில் ஒன்று முகல்சராய் ரயில் நிலையத்தின் பெயரை தீனதயாள் உபாத்யாய் ரயில் நிலையம் என்று மாற்றம் செய்யவேண்டும் என்பது.

இதற்கான முன்வரைவு மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டு மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. இந்நிலையில் தற்போது இந்த முடிவிற்கு மத்திய அரசு ஒப்புதலளித்துள்ளது. இது தொடர்பான NOC  சான்றிதல் உத்திர பிரதேச அரசிற்கு விரைவில் அனுப்பப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த பெயர் மாற்றத்திற்கு IB, இந்திய புவியியல் ஆய்வு மையம், அஞ்சல்துறை, ரயில்வே முதலிய துறைகளில் இருந்து எந்த ஆட்சேபனையும் தெரிவிக்கப்படவில்லை என்று கூறப்பட்டுள்ளது. அரசு வழிகாட்டுதலின் படி ரயில் நிலையங்கள், கிராமங்கள், நகரங்கள் ஆகியவற்றிற்கு பெயர் மாற்றம் செய்ய மத்திய உள்துறை அமைச்சகத்திடம் இருந்து ஆட்செபனையற்ற சான்றிதல் பெறவேண்டும்.

தற்போதைய இந்த பெயர் மாற்றம் தொடர்பாக எந்த ஒரு துறையில் இருந்தும் மாற்றுக்கருத்துக்கள் வராத நிலையில் உத்திர பிரதேச அரசிற்கு NOC சான்றிதல் வழங்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது. இதனையடுத்து பொதுமக்களுக்கு ஏற்படும் சிக்கலை தவிர்க்க உத்திர பிரதேச பொதுப் பணித்துறை இது தொடர்பான அறிவிப்பு ஒன்றை வெளியிடும் என்றும் கூறப்பட்டுள்ளது.

மேலும் ரயில்வே அமைச்சகத்திடம் அவர்களது பதிவுகளில் இந்த பெயர் மாற்றம் தொடர்பான மாற்றங்களை செய்யவேண்டி உத்தரவுகளும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்திய ரயில் நிலையங்களில் பழமையான ரயில் நிலையங்களின் ஒன்றான முகல்சாராய் ரயில் நிலையத்தை தீனதயாள் உபாத்யாய் ரயில் நிலையமாக மாற்றுவதற்கு உத்திர பிரதேச அரசு முக்கிய காரணமாக கூறியது, உபாத்யாய் இந்த ரயில் நிலையத்தில் வைத்து உயிரிழந்தார் என்பதே.

முன்னதாக ஆக்ரா விமான நிலையத்தை தீனதயாள் உபாத்யாய் விமான நிலையம் என்றும் மதுரா அருகே உள்ள ஃபரா டவுன் ரயில் நிலையத்தை உபாத்யாய்  ரயில் நிலையம் என்றும் பெயர் மாற்றம் செய்ய உத்திர பிரதேச  அரசு முடிவு செய்திருந்தது. ஃபரா டவுன் ரயில் நிலையத்தை பெயர் மாற்றம் செய்யும் முன்வரைவு முந்தைய அகிலேஷ் அரசால் முன்வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.