முகிலனை நீதிமன்ற காவலில் வைத்து விசாரிக்க உத்தரவு!

0

சமூக செயற்பாட்டாளர் முகிலன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு காணாமல் போனார். இந்நிலையில், கடந்த 7ஆம் தேதி ஆந்திராலிருந்து தமிழகத்திற்கு கொண்டுவரப்பட்டார். அப்போது காவல்துறை வாகனத்தில் இருந்த முகிலன், செய்தியாளர்களிடம், என்னை தமிழக அரசும், ஸ்டெர்லைட் நிர்வாகமும் தான் கடத்தியது என்று கூறினார்.

2017ஆம் ஆண்டு ஹட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின் போது முகிலன் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி பலாத்காரம் செய்ததாக, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார்.

இந்த புகாரின் காரணாமாக காவல்துறையினர் கடந்த 7ஆம் தேதி முகிலனை கைது செய்தனர். இதையடுத்து கரூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி முகிலனை 15 நாள் நீதிமன்ற காவலில் வைத்து விசாரிக்கும்படி உத்தரவிட்டார். இந்த உத்தரவையடுத்து முகிலன் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Leave A Reply