முகிலன் எங்கே? மத்திய அரசுக்கு ஐ.நா மனித உரிமை கேள்வி!

0

மனித உரிமை  மற்றும் சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் முகிலன், பிப்ரவரி மாதம் மதுரை செல்வதற்காக சென்னை எழும்பூர் ரயில் நிலையத்துக்கு வந்த சிசிடிவி பதிவுகள் உள்ளன. அதன் பின்னர் அவர் குறித்த விபரங்கள் எதுவும் தெரியவில்லை.

இவர் ஸ்டெர்லைட் ஆலை குறித்தும், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்தும் அரசுக்கு எதிரான சில ஆதாரங்களை வெளியிட்டிருந்தார். இதனால் தான் முகிலன் காணாமல் போனாரா என்ற கேள்வி மக்களிடம் பரவலாக எழும்பியது.

முகிலனை கண்டுபிடிக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு கொடுக்கப்பட்டு, இது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி விசாரணை நடத்தி வருகின்றது. ஆனால் விசாரணையில் முன்னேற்றம் எதுவும் அடைந்ததாக தெரியவில்லை.

மேலும் சமூக வலைதளங்களில் முகிலனுக்கு குரல் கொடுக்கும் விதமாக முகிலன் எங்கே #WhereIsMugilan என்ற ஹேஷ்டேக்கை பொதுமக்கள் டிரெண்ட் செய்தனர்.

இந்த நிலையில், முகிலனை கண்டுபிடிப்பது குறித்து மேற்கொள்ளப்பட்ட விசாரணை அறிக்கையை தாக்கல் செய்யுமாறு இந்திய அரசுக்கு ஐ.நா. மனித உரிமை கவுன்சில் உத்தரவிட்டுள்ளது.

இந்தியாவில் உள்ள மனித உரிமை, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் சுதந்திரமாகவும், பாதுகாப்பாகவும் பணியாற்றுவதற்கு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை குறித்தும் பதிவு செய்ய ஐ.நா. மனித உரிமை கவுன்சில் கூறியிருக்கிறது.

Comments are closed.