முகிலன் எங்கே?

0

முகிலன் எங்கே?

கார்ப்பரேட் நிறுவனங்களின் சேவகர்களாக செயல்பட்டுக்கொண்டிருக்கும் மத்திய, மாநில அரசுகள் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராடிய தன் சொந்த நாட்டு குடிமக்களையே துடிதுடிக்க சுட்டுக்கொன்ற சம்பவம் பலரையும் உலுக்கியது. தற்போது ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உத்தரவிட முடியாது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தவுடன் நமது பிரச்சனைக்கு தீர்வு கிடைத்துவிட்டதாக பலர் ஆறுதல் பெருமூச்சுவிட்டனர். ஆனால், போராட்டத்தில் பங்குபெற்று காவல்துறையால் சுட்டுக்கொல்லப்பட்ட அப்பாவிகளின் குடும்பத்தினருக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை. உரிமைக்காகப் போராடிய மனிதர்களை காக்கை குருவிகளை சுடுவதை போல் சுட்டுத்தள்ளிய மனித மிருகங்களுக்கு எந்த தண்டனையும் வழங்கப்படவில்லை. இந்த தாக்குதலுக்கு மூலக்காரணமாக இருந்த வேதாந்தா நிறுவனம், மத்திய பா.ஜ.க. அரசு, மாநில அதிமுக அரசு மீது எந்த நடவடிக்கையும் பாயவில்லை. சொல்லப்போனால் ஸ்டெர்லைட் தாக்குதலில் உயிர் தியாகம் செய்தவர்களை தமிழகமே மறந்துவிட்டு நாடாளுமன்ற தேர்தல் பற்றி பேசிக் கொண்டிருக்கிறது.

இந்த சூழலில், ஸ்டெர்லைட் படுகொலைக்கு காவல்துறையும் வேதாந்தா குழுமமும்தான் காரணம் என்பதை ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தினார் சூழலியல் போராளி முகிலன். ஈரோடு மாவட்டம் சென்னி மலையை சேர்ந்த முகிலன் அரசு பொதுப்பணித்துறை பொறியாளராக இருந்து தனது வேலையை ராஜினாமா செய்துவிட்டு கூடன்குளம் அணுஉலை எதிர்ப்பு போராட்டம், ஜல்லிக்கட்டு போராட்டம், ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டம் என மக்கள் நல போராட்டங்களில் தீவிரமாக ஈடுபட்டு வந்தார். இவர் மீது தேச துரோக வழக்கு உட்பட 15க்கும் மேற்பட்ட பொய் வழக்குகள் உள்ளன. கடந்த 2017ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் கூடன்குளம் எதிர்ப்பு போராட்டத்தில் பங்கேற்றதற்காக கைது செய்யப்பட்ட முகிலன், மதுரை மத்திய சிறையில், தனிமை சிறையில், அடைக்கப்பட்டு காவல்துறையால் பல்வேறு சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டார். ஓராண்டுக்கு பின்னர் கடந்த 2018ஆம் ஆண்டு செப்டம்பரில் விடுவிக்கப்பட்ட முகிலன் 7 தமிழர் விடுதலை, விவசாயிகள் பிரச்சனை, ஸ்டெர்லைட் படுகொலைகள் தொடர்பாக மீண்டும் போராடத் தொடங்கினார். … <strong><span style=”color: red;”>???? ????? ?????? ????? ??????? ??????????? ??????????. ?????????<a href=”http://www.puthiyavidial.com/shop/” target=”_blank” rel=”noopener noreferrer”> ????? ?????????</a> </span></strong>

Comments are closed.