முஸஃபர்நகர் கலவர வழக்கில் நியாயமான விசாரணை மேற்கொள்ள வேண்டும் – அலஹாபாத் உயர் நீதிமன்றம்

0

முஸஃபர்நகர் கலவரத்தில் 13 பேர் கொல்லப்பட்டது தொடர்பான வழக்கில் நியாயமான விசாரணை மேற்கொள்ள வேண்டும் என அலஹாபாத் உயர்நீதி மன்றம் காவல்துறைக்கு உத்தரவிட்டிருக்கிறது.

உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவு பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா தாக்கல் செய்த ரிட் மனுவின் விளைவாக வந்துள்ளது. கலவரத்தில் கொல்லப்பட்டவர்களின்  உறவினர்களுக்கு சட்ட உதவி அளித்து அவர்களை இந்த மனுவை அலஹாபாத் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வைத்தது பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா.

முஸஃபர்நகரில் 2013ல் கலவரம் நடந்த உடனேயே கலவரத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்கச் செய்யும் வகையில் அங்கு ஒரு சட்ட உதவி மையம் பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியாவினால் நிறுவப்பட்டது. இந்த மையத்தில் இருந்து வழக்கறிஞர் குழு ஒன்று பாதிக்கப்பட்டவர்களுக்காக போராடி வருகிறது. இது வரை 85 குடும்பங்களுக்கு தலா இழப்பீடு  ஐந்து லட்ச இழப்பீடு தொகையை சட்ட போராட்டம் மூலம் பெற்றுத் தந்துள்ளது. இந்த சட்ட உதவி மையத்தின் மூலம் ஏறத்தாழ 50 வழக்குகள் கையாளப்பட்டு வருவதாகவும் அந்த மையம் தெரிவித்துள்ளது.

Comments are closed.