முதலில் அமித் ஷாவின் பெர்ஷிய பெயரை மாற்றுங்கள்: பாஜகவிடம் வரலாற்றாய்வாளர் இர்ஃபான் ஹபீப்

0

முதலில் அமித் ஷாவின் பெர்ஷிய பெயரை மாற்றுங்கள்: பாஜகவிடம் வரலாற்றாய்வாளர் இர்ஃபான் ஹபீப்

முந்தைய காங்கிரஸ் ஆட்சியின் திட்டங்களை பெயர் மாற்றி மறு அறிவிப்பு செய்து கொண்டிருந்த பாஜக தற்போது நகரங்களின் பெயர்களையும் மாற்றம் செய்து வருகிறது. இது குறித்து கருத்து தெரிவித்த வரலாற்றாய்வாளர் இர்ஃபான் ஹபீப், பாஜக தலைவர் அமித் ஷாவின் பெயரில் உள்ள ஷாபெர்ஷிய பெயர் என்றும் அதனை முதலில் பாஜக மாற்றம் செய்யட்டும் என்று தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தெரிவிக்கையில், “அவரது (அமித் ஷாவின்) பெயரில் உள்ள ஷாஎன்பது குஜராத்தி பெயர் அல்ல. அது பெர்ஷிய பூர்வீகம் உடையது. இன்னும் சொல்லப்போனால் குஜராத் என்ற பெயரே பெர்ஷிய பூர்வீகம் உடைய பெயர் தான். இது முன்னதாக குஜராத்ரா என்ற அழைக்கப்பட்டது. இதனையும் அவர்கள் மாற்ற வேண்டும்.” என்று தெரிவித்துள்ளார்.

இன்னும், “பாஜக அரசின் இந்த பெயர் மாற்றும் படலம் ஆர்எஸ்எஸ் இன் இந்துத்வா சித்தாந்தத்திற்கு ஒத்துப்போகிறது. இது பாக்கிஸ்தானில் இஸ்லாத்தோடு ஒத்துப்போகதவை எவ்வாறு அகற்றப்படுகிறதோ அதே போன்றுள்ளது. பாஜக மற்றும் அதன் ஆதரவாளர்கள் இஸ்லாமிய பூர்வீகமுள்ள அனைத்தையும் மாற்றம் செய்ய விரும்புகின்றனர்.” என்று ஹபீப் தெரிவித்துள்ளார்.

இவரின் இந்த கருத்து, உத்திர பிஓரதேச முதல்வர் யோகி அதித்யநாத்திற்கு பாஜக எம்எல்ஏஜகன் பிரசாத் கார்க், ஆக்ராவில் அகர்வால் சமூகத்தினர் அதிகம் வசிப்பதால் அதனை ஆக்ராவன் என்று பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்று எழுதிய கடிதத்திற்கு பதிலாக வெளியாகியுள்ளது.

இது குறித்து பத்திரிகையாளர்களிடம் தனது கருத்தை தெரிவித்த ஜகன் பிரசாத், “ஆக்ரா என்பதற்கு எந்தவித்த அர்த்தமும் இல்லை. சுமார் 5000 வருடங்கள் முன்பு யமுனா நதிக்கரையில் உள்ள பகுதிகள் அனைத்தும் அடர்ந்த காடுகளாக இருந்தன. இதனை மக்கள் ஆக்ராவன் என்று அழைத்தனர். இது மகாபாரதத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளது. பின்னர் முகலாயர்கள் ஆட்சியில் இந்த பகுதி அக்பராபாத் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், அரசு இப்பகுதியை ஆக்ராவன் என்று வேறொரு காரணத்திற்காக பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்றும் அது இப்பகுதியில் அகர்வால் சமூகத்தவர்கள் பெருமளவில் வசிக்கின்றனர் என்றும் இவர்கள் மஹாராஜா ஆக்ராசென்ஐ பின்பற்றுபவர்கள் என்றும் அவர் ஒரு காலத்தில் ஆக்ராவன் பகுதியை ஆண்டுவந்தார் என்றும் தெரிவித்துள்ளார்.

இவரது இந்த கூற்றுகளுக்கு பதில் தெரிவித்த வரலாற்றாய்வாளர் இர்ஃபான் ஹபீப், முதலில் ராஜா ஆக்ராசென் என்பவர் கற்பனைக் கதாபாத்திரம் என்றும் அடுத்து அகர்வால் சமூகம் ஹரியானாவில் உள்ள அகோராவை பூர்வீகமாக கொண்டது, ஆக்ராவை அல்ல என்றும் இந்த நகரத்தை பெயர் மாற்றம் செய்ய இவர்கள் கூறும் எந்த காரணமும் சரியானது அல்ல என்று தெரிவித்துள்ளார்.

ஆக்ரா என்ற பெயர் முதலில் 15 ஆம் நூற்றாண்டில் சிக்கந்தர் லோடி காலகட்டத்தில் இருந்து காணக்கிடைக்கிறது என்றும் அது முன்னதாக தோஆப் கங்கை மற்றும் யமுனை நதிக்கு இடையேயான பகுதிகள் என்று அழைக்கப்பட்டது என்று ஹபீப் தெரிவித்துள்ளார்.

Comments are closed.