முதலில் மோகன் பகவத் 10 குழந்தைகளை பெறட்டும்: அரவிந்த் கெஜ்ரிவால்

1

ஆக்ராவில் நிகழ்ச்சி ஒன்றில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் பங்கேற்றபோது பத்திரிக்கையாளர்களிடம், “எந்த சட்டம் இந்துக்களின் ஜனத்தொகை அதிகரிக்கக் கூடாது என்று கூறுகிறது? அப்படி ஏதும் இல்லை. மற்ற சமூகத்தின் ஜனத்தொகை அதிகரிக்கும் போது இதுக்களை எது தடுக்கிறது? இது அரசு எந்திரத்துடன் தொடர்பான பிரச்சனை அல்ல. சமூக சூழலால் ஏற்பட்ட பிரச்சனை” என்று கூறியிருந்தார்.

மேலும் இந்துக்கள் அனைவரும் 10 குழந்தைகளை பெற வேண்டும் என்று மோகன் பகவத் கூறியிருந்தார். இதற்கு பதிலளிக்கும் வகையில்,”இந்துக்களை தூண்டிவிடுவதற்கு முன், மோகன் பகவத் 10 குழந்தைகளை பெறட்டும்” என்றும் “அந்தக் குழந்தைகளை நல்ல முறையில் வளர்க்கட்டும்” என்றும் அரவிந்த் கெஜிர்வால் கருத்து தெரிவித்துள்ளார்.
இவர் பங்கேற்ற இந்த கூட்டத்தில் பல்கலைகழக ஆசிரியர்கள், கல்வியாளர்கள், ஆக்ரா மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் இருந்து வந்த அதிகளவிலான ஆசிரியர்கள் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து கருத்து தெரிவித்த சிவ சேனா கட்சி, மோகன் பகவத்தின் கருத்து பழைமைவாத கருத்து என்றும் வளர்ந்து வரும் முஸ்லிம்களின் ஜனத்தொகையை கட்டுப்படுத்த இந்துக்களின் ஜனத்தொகையை பெருக்குவது தீர்வாகாது என்றும் பொது சிவில் சட்டத்தை அமலுக்கு கொண்டு வர வேண்டும் என்றும் கூறியுள்ளது.

காங்கிரஸ் கட்சி, “மோகன் பகவத்திடமிருந்து வேறென்ன எதிர்பார்க்க முடியும்” என்று கூறியுள்ளது. மேலும் “தனது ஒவ்வொரு பேச்சிலும் சமூகத்தை பிளவு படுத்தும் கருத்துக்களையே அவர் பேசுகிறார்” என்றும், “வளர்ந்து வரும் வேலையின்மை மற்றும் விலைவாசி உயர்வு குறித்து அவர் பேசி இருக்க வேண்டும். ஆனால் அவர் அதனை செய்ய மாட்டார்” என்று காங்கிரஸ் கட்சி தலைவர் குலாம் நபி ஆசாத் தெரிவித்துள்ளார்.

Discussion1 Comment

  1. ஜனத்தொகை ஒரு தேசிய அபாயம்.ஆனால் அதே இந்துக்களாக இருந்தால் அது குற்றமாகாது.இவர்களின் சாயம் வெளுக்கும்.இந்தியாஇந்து-முஸ்லிம் ஒற்றுமையால் புனிதப்படுத்தப்படும்.