முதல்வர் மோடி ஆட்சியில் குஜராத்தில் செழித்த பசு பாதுகாவலர்கள்

0

பசுவதை காரணம் காட்டி நாட்டில் தலித்கள் மற்றும் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளது. இது குறித்து மெளனம் காத்து வந்த மோடி தற்பொழுது வாய் திறந்துள்ளார். இது குறித்து பேசிய அவர் “சுட வேண்டுன்மானால் என்னை சுடுங்கள்” என்று கூறியிருந்தார்.

ஆனால் இது போன்ற பசு பாதுகாவலர்கள் மோடி குஜராத் முதல்வராக இருந்த போது தழைத்தோங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது. 2011 இல் இருந்து 2014 வரை குஜராத் அரசு சட்டவிரோத கால்நடை போக்குவரத்தை பிடித்தனர் என்பதற்காக சுமார் 1394 பசு பாதுகாவலர்களுக்கு 75 லட்சம் வரை அரசு பணத்தை ரொக்கப்பரிசாக வழங்கியது. இந்த தகவலை அரசு இணையதளமான Gauseva and Gauchar Vikas Board தெரிவித்துள்ளது.

இதே போன்ற தொகை 2321 பசு பாதுகாப்பு மையங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது. மேலும் இவர்களது செயல்பாட்டை அதிகரிக்க ஊக்குவிக்கும் வகையில் சிறந்த பசு காவலர் என்ற பட்டமும் வழங்கப்பட்டு அவர்களுக்கு 3.75 லட்சம் ரொக்கப்பணமும் வழங்கப்பட்டது.

2014 பாராளுமன்ற தேர்தலில் மோடி மாட்டிறைச்சி ஏற்றுமதிக்கு கண்டனம் தெரிவித்தார். 1999 வரை கால்நடை பராமரிப்பு துறையில் இருந்த GGVB மோடி அரடில் 2010 இல் புதுப்பிக்கப்பட்டது. மேலும் கால்நடை போக்குவரத்து / கடத்தல் தொடர்பாக ஒரு FIR க்கு 500 ரூபாய் பரிசு என்ற வன்னம் பரிசுகளும் இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை சிறந்த பசு பாதுகாவலர் என்கிற பரிசும் 25000 ரூபாய் பணமும் வழங்கப்பட்டது.

GGVB இணையதளத்தின் படி பசு பாதுகாப்பு குழுக்களுடன் இணைந்து பசு பாதுகாப்பு சட்டங்களை சரியான நடைமுறை படுத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.மேலும் GGVB க்கு வழங்கப்பட்ட ஆண்டு நிதியை 1.5 கோடி ரூபாயில் இருந்து 150 கொடிகளாக அதிகரித்தது.

2011 ஆம் ஆண்டு குஜராத் விலங்குகள் பாதுகாப்பு சட்டம் மாறுதல் செய்யப்பட்டு மாடுகள் உண்பது, விற்பது, மற்றும் கடத்துவது சட்டவிரோதமாக்கப்பட்டது. முன்னதாக மாடுகளை கொல்வது மட்டும் அங்கு சட்டவிரோதமாக இருந்தது.

இதற்கான தண்டனைகள் முன்னதாக ஒரு வருட சிறை மற்றும் 1000 ருபாய் அபராதம் என்று இருந்தது. பின்னர் இதுவும் மாற்றப்பட்டு 7 வருட சிறை அல்லது 50000 ரூபாய் அபராதம் அல்லது இரண்டும் என்று சட்டத்திருத்தம் செய்யப்பட்டது.

Comments are closed.