எங்களின் “முதுகில் குத்தாமல், நெஞ்சில் சுடுங்கள்”- ஃபாரூக் அப்துல்லாஹ்!

0

ஜம்மு காஷ்மிர் விவகார மசோதா தாக்கல் செய்யப்படுவதற்கு முன்னரே ஜம்மு காஷ்மிரின் முன்னாள் முதலமைச்சர்கள் மெஹபூபா முப்தி, ஓமர் அப்துல்லாஹ் உள்ளிட்ட பல தலைவர்கள் கைது செய்யப்பட்டனர்.

காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா மீதான விவாதம் மக்களவையில் நேற்று நடைபெற்றது. அப்போது, காஷ்மீர் எம்.பியான ஃபரூக் அப்துல்லாஹ் எங்கே என தி.மு.க, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பின. நாடாளுமன்றத்துக்கு வர முடியாத வகையில் அவரை மத்திய அரசு தடுத்து வருவதாக குற்றம்சாட்டினர். இதற்கு பதிலளித்த “அமித்ஷா, ஃபரூக் அப்துல்லா கைது செய்யப்படவும் இல்லை, வீட்டுக் காவலிலும் வைக்கப்படவுமில்லை. அவர் தனது வீட்டில் தான் இருக்கிறார்.” எனக் கூறினார்.

இந்த நிலையில் எம்.பி பரூக் அப்துல்லாஹ், தனது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், “தான் கைது செய்யப்படவில்லை என்று அமித்ஷா நாடாளுமன்றத்தில் பொய் சொல்கிறார். என் மாநிலம் எரிந்து கொண்டிருக்கும் போது நான் ஏன் வீட்டில் இருக்க வேண்டும். நான் வீட்டுச்சிறையில் இல்லை என்றால் என்னை ஏன் வெளியில் விட மறுக்கின்றனர்.

நான் நம்பிக்கை வைத்த இந்தியா இது அல்ல. மத்திய அரசு செய்தது ஜனநாயக விரோத நடவடிக்கை. எங்களின் முதுகில் குத்தாமல், நெஞ்சில் சுடுங்கள். மத்திய அரசின் முடிவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தை நாடுவோம். அமைதியான முறையில் தீர்வு காண விரும்புகிறோம்.” என்று தெரிவித்தார்.

Comments are closed.