முத்தலாக் அவசர சட்டம்: விசாரணை மனு ஒத்திவைப்பு

0

முத்தலாக் அவசர சட்டப்பிரிவுகளை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையை, ஏப்ரல் 1ம் தேதிக்கு சென்னை உயர் நீதி மன்றம் ஒத்திவைத்துள்ளது.

மத்திய அரசு பிறப்பித்த அவசர சட்டத்தில், முத்தலாக் சொல்லி விவாகரத்து செய்யும் கணவருக்கு மூன்றாண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான பிரிவுகளை அரசியல் சாசனத்துக்கு விரோதமானது என அறிவிக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த நீதிபதிகள், அவசர சட்டத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கின் நிலை குறித்து தெரிவிக்கும்படி மனுதாரருக்கு அறிவுறுத்தி, விசாரணையை தள்ளிவைத்தனர்.

Comments are closed.