முன்னாள் குஜராத் டி.ஜி.பி. தாக்கூர் டில்லிக்கு மாற்றமாக மறுப்பு

0

குஜராத் மாநிலத்தின் முன்னாள் டி.ஜி.பி. பி.சி.தாக்கூர் குஜராத்தை விட்டு டில்லிக்கு மாற்றம் செல்ல முடியாது என்று தெரிவித்துள்ளார்.

குஜராத்தில் சமீபத்தில் நடந்த படேல் சமூகத்தினரின் போராட்டங்களின் போது சரியாக நிர்வகிக்க வில்லை என்று குற்றம் சாட்டி பி.சி.தாக்கூரை குஜராத்தில் இருந்து டில்லிக்கு மாற்றம் செய்தது மாநில அரசு. இவரது இடத்தில் இஷ்ரத் ஜஹான் போலி என்கெளண்டர் புகழ் பாண்டேயை காவல் துறை தலைவராக நியமித்தது.

இந்நிலையில் நேற்று தனது மனைவியின் உடல் நிலை ஆபத்தான நிலையில் இருப்பதாக கூறி விடுப்பில் சென்றார் பி.சி.தாக்கூர்.  பத்திரிக்கை ஒன்றிற்கு தாக்கூர் அளித்த பேட்டியில், தற்பொழுது தான் டெல்லி செல்லும் பேச்சுக்கே இடமில்லை என்றும் தன் மனைவியின் உடல்நிலை மிகவும் மோசமான கட்டத்தில் இருக்கிறது என்றும் இதனை தான் மாநில அரசுக்கு தெரிவித்துவிட்டதாகவும் கூறியுள்ளார்.  தான் இந்த தேசத்திற்காகவும் மாநிலத்திற்காகவும் உழைத்துள்ளதாகவும் எப்போதும் ஒடுக்கப்பட்டோருடன் இருந்துள்ளதாகவும் ஆனால் சில தனிமனிதர்களின் கட்டளைகளுக்கு தன்னால் கீழ்படிய முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.

2013 ஆம் ஆண்டு டி.ஜி.பி. ஆக பதவியேற்ற தாக்கூர் போலி என்கெளண்டர் வழக்கில் கைது செய்யப்பட்டு பிணையில் வந்த ஒருவருக்கு (பிரிதிவி பால் பாண்டே) அந்த பொறுப்பு வழங்கப்படுவதில் மிகுந்த அதிருப்தியில் உள்ளார் என்று கூறப்படுகிறது.

Comments are closed.