முன்னாள் ஆர்எஸ்எஸ் உறுப்பினரான மேகாலயா ஆளுநர் மீது பாலியல் புகார்

0

மேகாலயாவின் ஆளுநராக பணியாற்றி வரும் முன்னால் ஆர்.எஸ்.எஸ். தொண்டரான சண்முகநாதனின் நடவடிக்கைகள் சரியில்லை என்று கூறி அதிகாரிகள் முதல் பணியாட்கள் வரை சுமார் 80 பேர் அவரை பனி நீக்கம் செய்யுமாறு பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

இவர் ராஜ் பாவனை பல பெண்கள் வந்து செல்லும் உல்லாச மாளிகையாக்கிவிட்டார் என்றும் இதன் மூலம் ராஜ் பவனின் பாதுகாப்பை சீர்குலைத்ததோடு அதனுடைய கண்ணியத்தையும் கெடுத்துவிட்டார் என்று குற்றம்சாட்டியுள்ளனர். இது ராஜ் பவனில் பணியாற்றுபவர்களுக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்ப்படுத்தியுள்ளது என்று அவர்கள் தங்களது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.

68 வயதுடைய சண்முகநாதன் தமிழகத்தை சேர்ந்த ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் முன்னாள் உறுப்பினர் ஆவர். இவர் மேகாலயாவின் ஆளுநராக கடந்த 2015 மே மாதம் 20 ஆம் தேதி பதவியேற்றார். இதனை தொடர்ந்து இவருக்கு 2016 செப்டெம்பர் மாதம் 16 ஆம் தேதி அருணாச்சல பிரதேசத்தின் பொறுப்பும் வழங்கப்பட்டது. 2015 செப்டெம்பரில் இருந்து 2016 ஆகஸ்ட் வரை மணிப்பூரும் இவரது பொறுப்பில் இருந்து வந்தது.

இந்நிலையில், தி ஹைலான்ட் போஸ்ட் என்ற பத்திரிகை, இவர் தொடர்பான மற்றொரு செய்தியை வெளியிட்டுள்ளது. அதில் ராஜ் பவனில் மக்கள் தொடர்பு அதிகாரி பணிக்கு விண்ணப்பித்த பெண் ஒருவரை நேர்காணலின் போது சண்முகநாதன் கட்டாயப்படுத்தி கட்டி அனைத்ததாகவும் முத்தமிட்டதாகவும் கூறப்படுகிறது. ஆனால் தன் மீது சுமத்தப்பட்டுள்ள இத்தகைய குற்றச்சாட்டுகளை சண்முகநாதன் மறுத்துள்ளார். மேலும் அங்கு பணிபுரியும் பெண்கள் தனது மகள் மற்றும் பேத்திகள் போன்றவர்கள் என்று அவர் கூறியுள்ளார்.

நேர்முகத் தேர்வு குறித்தசெய்திக்கு பதிலளித்த அவர், இந்த பொறுப்பிற்காக விண்ணப்பித்தவர்களை தான் நேரில் சந்தித்து சரியான நபரை பணிக்கு தேர்வு செய்ய விரும்பியதாகவும், அவர்கள் அனைவரும் அரை மணி நேரம் அங்கு இருந்தனர் என்றும், அவர்கள் மேல் தனக்கு மிகுந்த மரியாதை உள்ளது என்றும் தான் எந்த ஒரு தவறும் செய்யவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும், இந்த பணிக்கு ஒரே ஒருவர் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்றும் மற்றவர்கள் தாங்கள் இந்த பணிக்கு தேர்வு செய்யப்படாததால் இவ்வாறு கூறுவது சரியில்லை என்று அவர் கூறியுள்ளார்.

Comments are closed.