முன்னாள் ஜனாதிபதி புகைப்படத்திற்கு மாலை அணிவித்த கல்வி அமைச்சர்!

0

ஜார்கண்ட மாநில கல்வி அமைச்சர் நீரா யாதவ் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் புகைப்படத்திற்கு நிகழ்ச்சி ஒன்றில் மாலை அணிவித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஸ்மார்ட் க்ளாஸ் என்னும் திட்டத்தை தொடங்கும் போதுதான் அமைச்சர் இந்த செயலை செய்துள்ளார்.
உயிருடன் இருப்பவர்களுக்கு இதுபோன்று மரியாதை செலுத்துவது கிடையாது என்ற அடிப்படை விஷயம் கூட மாநில கல்வி அமைச்சருக்கு இல்லையா என்று பொதுமக்கள் கண்டன குரல்களை உயர்த்தி வருகின்றனர்.
ஆனால் தனது செயலில் தவறு ஏதும் இல்லை என்று கூறுகிறார் இந்த பா.ஜ.க. அமைச்சர்.

Comments are closed.