முன்னாள் பாஜக அமைச்சர் ஹரேன் பாண்டயாவை கொலை செய்ய ஒப்பந்தம் வழங்கிய ஐபிஎஸ்அதிகாரி வன்சாரா

0

முன்னாள் பாஜக அமைச்சர் ஹரேன் பாண்டயாவை கொலை செய்ய ஒப்பந்தம் வழங்கிய ஐபிஎஸ்அதிகாரி வன்சாரா

சொஹ்ராபுதீன் ஷேக் போலி என்கெளவுண்டர் வழக்கின் முக்கிய சாட்சியான அசாம் கான், பாஜக வின் மூத்த தலைவரும் குஜராத்தின் முன்னாள் உள்துறை அமைச்சருமான ஹரேன் பாண்டையாவை கொலை செய்ய முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி D.G. வன்சாரா உத்தரவிட்டதாக தெறிவித்துள்ளார்.

சொஹ்ராபுதீன் ஷேக் மற்றும் துல்ஸிராம் பிரஜபாதி ஆகியோர் போலி என்கெளவுண்டர் வழக்கு விசாரணையின் போது அவர் இதனை தெரிவித்துள்ளார். முன்னதாக 2010 ஆம் ஆண்டு சிபிஐ தன்னிடம் விசாரணை நடத்திய போதும் தான் இதனை தெரிவித்ததாகவும் ஆனால் அப்போது அவர்கள் இதனை பதிவு செய்ய மறுத்துவிட்டனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தெரிவிக்கையில், “சொஹ்ராபுதீன் ஷேக் உடனான எனது கலந்துரையாடலின் போது, நயீம் கான், ஷஹித் ராம்பூரி மற்றும் சொஹ்ராபுதீன் ஆகியோருக்கு குஜராத் உள்துறை அமைச்சர் வன்சாராவை கொலை செய்ய ஒப்பந்தம் வழங்கப்பட்டது என்றும் அவர்கள் ஹரேன் பாண்டையாவை கொலை செய்ததாக சொஹ்ராபுதீன் என்னிடம் தெரிவித்தார்.” என்று அசாம் கான் தெரிவித்துள்ளார். மேலும் சொஹ்ராபுதீன் ஒரு நல்ல மனிதரை கொலை செய்துவிட்டார் என்று தான் அவரிடம் கூறியதாகவும் அதற்கு இந்த கொலை ஒப்பந்தம் தனக்கு வன்சாரவிடம் இருந்து கொடுக்கப்பட்டது என்றும் அது மேலிருந்து கொடுக்கப்பட்ட உத்தரவு என்றும் அவர் கூறியதாக அசாம் கான் தெரிவித்துள்ளார்.

சொஹ்ராபுதீன் ஷேக் போலி என்கெளவுண்டர் வழக்கில் முதல் குற்றவாளியான வன்சாரா கடந்த 2017 ஏப்ரல் 1 ஆம் தேதி விசாரணை நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டார். விசாரணை நீதிமன்றத்தின் இந்த உத்தரவை சிபிஐ எதிர்க்காத நிலையில் சொஹ்ராபுதீன் ஷேக்கின் சகோதரர் ரூபாபுதீன் அதனை எதிர்த்து மேல் முறையீடு செய்தார். பின்னர் விசாரணை நீதிமன்றத்தின் இந்த உத்தரவை பாம்பே உயர் நீதிமன்றமும் உறுதி செய்தது. இதில் நடைபெற்ற கூடுதல் குறுக்கு விசாரணையில், அசாம் கான் கூறிய இந்த தகவல்கள் ஏன் சிபிஐயினால் பதிவு செய்யப்படவில்லை என்ற கேள்விக்கு, தான் இந்த தகவல்களை சிபிஐ அதிகாரி N.S.ராஜு விடம் தெரிவித்ததாகவும் அதற்கு ராஜு, “என்னை புதிய குழப்பத்தில் ஈடுபடுத்தாதே” என்று தெரிவித்ததாகவும் அசாம் கான் தெரிவித்துள்ளார்.

2002 கலவரத்திற்கு பிறகு ஹரேன் பாண்டையா பிளவுபட்ட சமூகங்களை ஒருங்கிணைக்க முயர்ச்சிகள் எடுத்தார் என்றும் அதனால் சொஹ்ராபுதீன் ஷேக் அவரை கொலை செய்ததும் தான் மிகவும் மோசமாக உணர்ந்து சொஹ்ராபுதீன் ஷேக்கை விட்டு பிரிந்து சென்றுவிட்டதாக அசாம் கான் தெரிவித்துள்ளார்.

சொஹ்ராபுதீன் ஷேக் போலி என்கெளவுண்டரின் பிறகு துல்ஸிராம் பிரஜபாதியை 2005 நவம்பர் மாதம் உதய்பூர் மத்தியா சிறையில் வைத்து சந்தித்ததாகவும், அங்கே தன்னை கண்ட துல்ஸிராம் சொஹ்ராபுதீன் கொலைக்கு தான் தான் காரணம் என்று கூறி அழுததாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் தன்னிடம் துல்ஸிராம், அரசியல் அழுத்தங்கள் காரணமாக சொஹ்ராபுதீன் ஷேக்கை கைது செய்ய வேண்டியுள்ளதாகவும் ஆறு மாதம் சொஹ்ராபுதீனை சிறையில் வைத்து வீடு பின்னர் விடுவித்துவிடுவதாக வன்சாரா தன்னிடம் கூறி சொஹ்ராபுதீன் ஷேக் பற்றிய தகவல்களை ஏமாற்றி பெற்றதாக கூறினார் என்று தெரிவித்துள்ளார். சொஹ்ராபுதீன் ஷேக் மற்றும் கவ்ஸர்பீ பண்ணை வீட்டில் வைத்து கொலை செய்யப்பட்டனர் என்று என்று தன்னிடம் கூறிய துல்ஸிராம் இதற்கு காரணமான வன்சாரா சுடாசமா உள்ளிட்ட காவல்துறையினரை தான் கொல்லப்போவதாக துல்ஸிராம் தெரிவித்ததாகவும் அசாம் கான் தெரிவித்துள்ளார்.

குஜ்ராத் முன்னாள் உள்துறை அமைச்சர் காரேன் பாண்டையா 2003 ஆம் ஆண்டு மார்க்க் மாதம் 26 ஆம் தேதி அகமதாபாத்தில் வைத்து சுட்டுக் கொலை செய்யப்பட்டார். இவரது கொலையை விசாரித்த குஜராத் விசாரணை நீதிமன்றம் 12 நபர்களை இந்த கொலையை செய்தவர்கள் என்று கூறி அதில் ஒன்பது நபர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது. பின்னர் இந்த வழக்கை விசாரித்த குஜராத் உயர் நீதிமன்றம் இவர்களை அனைவரையும் குற்றமற்றவர்கள் என்று கூறி விடுவித்தது. இவர்களின் விடுதலைக்கு எதிரான மேல் முறையீடு உச்ச நீதிமன்றத்தில் கிடப்பில் உள்ளது.

சொஹ்ராபுதீன் ஷேக் மற்றும் துல்ஸிராம் பிரஜபாதி போலி என்கெளவுண்டர் வழக்கில் ராஜ்ஸ்தான் காவல்துறை மற்றும் குஜராத் காவல்துறையினர் உட்பட 22 பேர் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். இவர்களுக்கு ஆதரவாக தான் சாட்சியளிக்க வேண்டும் என்று தனக்கு அழுத்தம் தரப்படுவதாக அசாம் கான் குற்றம் சாட்டியுள்ளார்.

Comments are closed.