முன்பை விட 10 மடங்கு அதிக வீரியத்துடன் ஆர்.எஸ்.எஸ், பாஜகவை எதிர்த்து போராடுவேன்: ராகுல் காந்தி!

0

பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ், கொலையை பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தங்களுடன் இணைத்து பேசியதாக ராகுல் காந்தி மீது ஆர்.எஸ்.எஸ் அவதூறு வழக்கு தொடர்ந்தது. இந்த அவதூறு வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இதற்காக ராகுல் காந்தி இன்று மும்பை நீதிமன்றத்தில் ஆஜரானார்.

தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து ராகுல் காந்தி ராஜினாமா செய்ததை தொடர்ந்து, இன்று ராகுல் காந்தி ஆஜரவாகினார். இந்த விசாரணை முடிவில் ரூ.15,000 உத்தரவாத தொகையுடன் ராகுல் காந்திக்கு முன்ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பின்னர் நீதிமன்றத்திற்கு வெளியே ராகுல் காந்தி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ”பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ்-க்கு எதிரான எனது போராட்டம் தொடரும். கடந்த 5 ஆண்டுகளாக போராடியதை விட 10 மடங்கு அதிக வீரியமாக நான் தொடர்ந்து எதிர்த்து, போராடுவேன். அவர்கள் என்னை தாக்கி பேசுவதை, நான் ரசிக்கிறேன்” என்று கூறினார்.

Comments are closed.