மும்பை: காவல்துறை கறுப்பு ஆடுகளை கண்டறிய உத்தரவு

0

குற்றச் செயல்களில் மும்பை காவல்துறை அதிகாரிகளின் பங்கு குறித்த செய்திகள் சமீப நாட்களில் தொடர்ந்து வெளி வந்தன. இதனால் காவல்துறையின் மீதான களங்கம் அதிகரித்துள்ளது. இதனை சரி செய்யும் நோக்கில் காவல்துறையில் உள்ள கறுப்பு ஆடுகளின் பட்டியலை தயார் செய்யுமாறு மும்பை கமிஷ்னர் ராகேஷ் மரியா உத்தரவிட்டுள்ளார்.
மும்பையை சேர்ந்த மாடல் ஒருவர், காவல்துறையினர் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தி பத்து இலட்சம் ரூபாயை அபகரித்ததாகவும் மரியாவிடம் புகார் செய்தார். இதனை தொடர்ந்து துணை இன்ஸ்பெக்டர்கள் சுனில் காப்தே, சுரேஷ் சூர்யவன்ஷி மற்றும் கான்ஸ்டபிள் யோகேஷ் பாண்டே ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இதற்கு சில தினங்களுக்கு முன்னர்தான் கான்ஸ்டபிள் தர்மராஜ் கலோகே போதை மருந்து கடத்துபவர்களுடன் தொடர்பில் உள்ள குற்றச்சாட்டுக்காக கைது செய்யப்பட்டார். இந்த நிகழ்வுகள் காவல்துறை மீதான களங்கத்தை அதிகரித்தது.
இதனை தொடர்ந்து சந்தேகம் உள்ள காவலர்களின் பட்டியலை தயார் செய்யுமாறு மும்பை கமிஷ்னர் ராகேஷ் மரியா உத்தரவிட்டுள்ளார். பணி இட மாற்றங்களின் போது இவர்கள் மக்களுடன் குறைந்த அளவில் தொடர்புள்ள இடங்களுக்கே மாற்றம் செய்யப்படுவார்கள் என்று மரியா தெரிவித்தார்.

Comments are closed.