மும்பை சங்கிலித் தொடர் ரயில் குண்டுவெடிப்பு குற்றவாளிகள் யார்? வெளிச்சத்திற்கு வரும் உண்மைகள்

0

இப்போதெல்லாம் எங்கு குண்டுவெடித்தாலும் அறிவு ஜீவிகளும், சமூக அக்கறை கொண்டவர்களும், முதலில் சந்தேகப்படுவது (சங்பரிவார்)அரசியல்வாதிகளையும், உளவு நிறுவனங்களையும் தான். பஞ்சாபில் தீவிரவாதிகள் ஜுலை 27 ஆம் தேதி தாக்குதல் நடத்தியபோது, இந்த தாக்குதல் யாகூப் மேனனை தூக்கிலிடுவதற்கு தூண்டுகோலாக அமைந்த தாக்குதல் என்றும், நாடாளுமன்றத்தில் நெருக்கடியை சந்தித்து வரும் பா.ஜ.க.விற்கு நிவாரணம் அளிப்பதற்காக நடத்தப்பட்ட தாக்குதல் என்றும் சமூக வலைதளங்களில் முஸ்லிம் அல்லாத சில முன்னணி பத்திரிகையாளர்களே செய்திகளை பதிவு செய்வதை காண முடிந்தது.

எங்கு தாக்குதல் நடந்தாலும் முஸ்லிம் பெயர்களை  கொண்டவர்கள்  தான் இதற்கு காரணம் என ஊடகங்கள் வெளியிடும் செய்திகள் இப்போது, மக்களிடம் அவ்வளவாக எடுபடுவதில்லை.  தீவிரவாதிகள் எனக்கூறி கைது செய்யப்படும் முஸ்லிம்கள் பல ஆண்டுகள் கழித்து நிரபராதியாக விடுதலை செய்யப்படுவதும், பத்துக்கும் மேற்பட்ட குண்டுவெடிப்புகளில்

சங்பரிவார்களுக்கு இருக்கும் தொடர்பு நிரூபணம் ஆனதும்தான் இதற்கு காரணம்.

அதே நேரம் முஸ்லிம்கள் மீது தீவிரவாத பழியை போடும் தங்களது பணியை பாசிஸ்டுகளும், பாசிச சிந்தனை கொண்ட உளவு, பத்திரிகை துறையினரும் தொடர்ந்து செய்துதான் வருகின்றனர். இந்த நிலையில்தான் இதுவரை குற்றவாளிகள் யார் என ஆதாரங்களுடன் நிரூபிக்கப்படாத மும்பை சங்கிலித் தொடர் குண்டுவெடிப்பு குறித்த கேள்விகள் எழுகின்றன. மஹாராஷ்டிரா தீவிரவாத எதிர்ப்பு படை, தேசிய புலனாய்வு அமைப்பு, மும்பை குற்றப் பிரிவு ஆகிய விசாரணை அமைப்புகள் இந்த தாக்குதல் குறித்து நடத்திய விசாரணையில் மாறுபட்ட கருத்துகளை தெரிவிக்கின்றன. நிச்சயம் இதில் ஒன்று மட்டுமே உண்மையாக இருக்க முடியும் அப்படி என்றால் மற்ற இரண்டு அமைப்புகள் யாருக்கு எதிராக, அல்லது யாரை காப்பாற்ற முயற்சி செய்கின்றன என்ற கேள்வி எழுகிறது.

2006 ஆம் ஆண்டு  ஜுலை  11 ஆம் தேதி மும்பையின் ஒன்பது  புறநகர் ரயில்களில் அடுத்தடுத்து வெடித்த குண்டுகளால் 1819 பேர் கொல்லப்பட்டனர். 824 பேர் காயம்  அடைந்தனர்.

குண்டுவெடிப்பு நடைபெற்று ஒன்பது ஆண்டுது ஆகிவிட்டன. ஆகஸ்ட் 2014 ஆம் ஆண்டு வழக்கு விசாரணையின் இறுதி கட்ட வாதங்கள் முடிந்தன. ஆனால்  தீர்ப்பு  எப்போது வெளியாகும் என்பதற்கான அறிகுறிகள் தென்படவில்லை.  ஜுலை இறுதி அல்லது ஆகஸ்ட் மாதத்தில், மஹாராஷ்டிரா  திட்டமிட குற்றங்கள்  தடுப்பு  சட்ட MஇOஇஅ நீதிமன்ற

சிறப்பு நீதிபதி ஓய்.டி ஷிண்டே தனது  தீர்ப்பை  வெளியிடுவார் என தகவல் வெளியாகியுள்ளது.

2006ஆம் ஆண்டு ஜுலை அக்டோபர் மாதங்களுக்கு இடையே  ஏ.டி.எஸ் எனப்படும் மஹாராஷ்டிரா  தீவிவாத எதிர்ப்பு படை குண்டுவெடிப்பு தொடர்பாக 13 பேரை கைது செய்தது. இவர்கள் அனைவரும் சிமி அமைப்பை சேர்ந்தவர்கள் என கூறப்பட்டது. 2001ஆம் ஆண்டு குற்றவாளிகளில் ஒருவரான பைசல் ஷேக் என்பவருக்கு  பாகிஸ்தானில் இருந்து செயல்படும்  லஷ்கர் இ தய்பா அமைப்பு  ஆயுதம் மற்றும் வெடிபொருட்களை  கையாளும் பயிற்சி அளித்தாக ஏ.டி.எஸ். கூறியது.

2004 ஆம் ஆண்டு ஷேக், லஷ்கர் அமைப்பின் உறுப்பினர் ஆனதாகவும்  பின்னர் குற்றம்

சாட்டப்பட்டவர்களில் நான்கு பேரை ஆயுதப் பயிற்சிக்காக பாகிஸ்தானிற்கு அனுப்பியதாகவும் ஏ.டி.எஸ் குற்றம்சாட்டியது.   அவர்களில் ஷேக்கின் சகோதரர் முஸம்மில், டாக்டர் தன்வீர் அன்சாரி, சமீர் ஷேக், சுஹைல் ஷேக் ஆகியோர்  ஷியா முஸ்லிம்கள் போல் நடித்து ஈரானிற்கு புனித யாத்திரை புறப்பட்டதாகவும் , அந்த வழியாக  பாகிஸ்தானிற்கு சென்றதாகவும் ஏ.டி.எஸ் கூறுகிறது.

2006 ஆம் ஆண்டு இவர்கள் அனைவரும் சேர்ந்து சலீம், சுகைல் ஷேக், அப்துல் ரசாக், அபு உமைத்  ஆகிய நான்கு பாகிஸ்தானியர்களை கடல் வழியாக சட்டவிரோதமாக இந்தியாவிற்கு வரவழைத்ததாக கூறுகிறது.  இதில் சலீம்,உமைத் ஆகியோர் பின்னர் கொல்லப்பட்டனர். ஆர்.டி.எக்ஸ். வெடிபொருட்களை ரெக்சின் பையில் வைத்து குண்டு வெடிப்பை நிகழ்த்தியதாக முதலில் தெரிவித்தனர்.

செப்டம்பர் 29, 2006, குண்டுவெடிப்பு நடைபெற்று  சுமார் மூன்று மாதங்களுக்கு பிறகு அப்போதைய மும்பை மாநகர காவல்துறை ஆணையர் ஏ.என் ராய்  நடத்திய பத்திரிகையாளர்கள்  சந்திப்பில் சில ‘திடுக்கிடும்’ தகவல்களை வெளியிட்டார். அதாவது  வெடிகுண்டுகளை பிரசர் குக்கர் ஒன்றில் வைத்து  வெடிக்கச் செய்ததாகவும் இரண்டு கடைகளில் அந்த குக்கர்களை  வாங்கியதாகவும் அவர் கூறினார்.

விசாரணை மிகவும் நுட்பமாக உயர்ந்த தரத்தில் நடைபெற்று வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.  ஆனால் 2006ஆம் ஆண்டு ஏ.டி.எஸ் தனது குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்த போது, விசாரணையின் தரம் பற்றி முதன்முறையாக கேள்வி எழுந்தது.

ஏ.டி.எஸ். தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் பிரசர் குக்கர் பற்றி எதுவும் சொல்லப்படவில்லை. ஆனால் வீட்டு உபயோக  பாத்திரம் என்ற சொல் குற்றப்பத்திரிகையில் இடம்பெற்றதாகவும், அது பிரசர் குக்கரை குறிக்கிறது எனவும் அப்போதைய ஏ.டி.எஸ்  தலைவர் ரகுவன்ஷி விளக்கமளித்தார்.

கைது செய்யப்பட்ட 13 பேர் மீதும் குற்றம் சாட்டப்பட்டது. அவர்கள்  அனைவரும்

சித்திரவதை செய்யப்பட்டு, குற்றங்களை ஒப்புக்கொள்ளச்செய்யப்பட்டதாக  கூறப்படு கிறது. அவர்கள் அனைவர் மீதும்  மஹாராஷ்டிரா  திட்டமிட்ட குற்றங்கள் தடுப்பு சட்டம், யு.ஏ.பி.ஏ, இந்திய தண்டனை சட்டம்  உள்ளிட்ட சட்ட பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. ஆனால் வலுவான ஆதாரங்கள் எதையும் அரசு தரப்பு சமர்ப்பிக்கவில்லை. அரசு தரப்பு வழக்கறிஞர் ராஜா தாக்ரே பிரசர் குக்கர் பயன்படுத்தியது குறித்து உறுதியாக கூறவில்லை.

மும்பை கமிஷ்னர் ராய், பத்திரிகையாளர் சந்திப்பில் கூறிய விஷயங்களை தனது விசாரணையின் போது முற்றிலுமாக மறுத்தார். இதுவல்லாமல் இன்னும் ஏராளமான குழப்பங்கள் விசாரணையில் இருந்தன. எந்த கடையில் இருந்து குற்றம் சாட்டப்பட்டவர்கள் குக்கர்களை வாங்கியதாக கூறினார்களோ அந்த கடைக்காரர்கள் யாரும் விசாரணைக்கு அழைக்கப்படவில்லை. அத்துடன் வெடிகுண்டுகள் எவ்வாறு தயாரிக்கப்பட்டன என்பது குறித்தும் தெளிவான கூற்று ஏதும் இல்லை.

குற்றம்சாட்டப்பட்டவர்களிடமிருந்து மிரட்டப்பட்டே ஒப்புதல் வாக்குமூலங்கள் பெறப்பட்டன என்பது தெளிவாக தெரிந்தது. அந்த வாக்குமூலங்களில் கூட, தாங்கள் பாகிஸ்தான் சென்று பயிற்சி பெற்றதாக கூறியவர்கள், வெடிகுண்டுகளை தயாரித்தது குறித்தோ அதனை வைத்தது குறித்தோ எதுவும்

சொல்லாதது ஆச்சர்மே. பாகிஸ்தானிற்கு செல்வதையெல்லாம் குற்றமாக கூற முடியாது என்று கூறுகிறார் குற்றம்சாட்டப்பட்டவர்கள்

சார்பாக ஆஜராகும் வழக்கறிஞர்களில் ஒருவரான பிரகாஷ் ஷெட்டி.

சம்பவம் நடைபெற்ற அன்று இஹ்திஸாம் சித்தீகி, பைசல் ஷேக் மற்றும் ஆசிஃப் கான் ஆகியோரின் மொபைல் போன்கள் சம்பவம் நடைபெற்ற இடங்களுக்கு அருகில் கூட இல்லை என்பதை அவர்களின் தொலைபேசி அழைப்புகளின் விபரங்கள் காட்டுகின்றன.

அரசு தரப்பு சாட்சிகளாக நிறுத்தப்பட்டவர்கள் சொல்லிக் கொடுக்கப்பட்ட பொய்களை அப்படியே ஒப்பிப்பதாக எதிர் தரப்பு கூறியது. ரயிலில் பயணம் செய்யும் அத்தனை நபர்கள் மத்தியில் குற்றம்சாட்டப்பட்டவர்களின் அங்க அடையாளங்களை அவர்களால் எப்படி இத்தனை தெளிவாக கூற முடிகிறது என்று கேள்வி எழுப்புகிறார் பிரகாஷ் ஷெட்டி.

ஏ.டி.எஸ். தலைவர் ரகுவன்ஷி, மும்பை கமிஷ்னர் ஏ.என்.ராய், ஜெய்ஜீத் சிங் ஆகியோர் தங்களை கடுமையாக சித்திரவதை செய்ததாக கைது செய்யப்பட்டவர்கள் முறையிட்டனர். தங்களை மிரட்டியே ஒப்புதல் வாக்குமூலங்கள் பெறப்பட்டதாக நீதிமன்றத்தில் தெரிவித்தனர். கைது செய்யப்பட்டவர்கள் மட்டுமின்றி அவர்களின் குடும்பத்தினரும் அழைத்து வரப்பட்டு மிரட்டப்பட்டனர்.

செய்யாத குற்றத்தை ஒப்புக் கொள்ளச் செய்ய, ரகுவன்ஷி தன்னிடம் பேரம் பேசியதாக கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரான பைசல் ஷேக் அதாவுர் ரஹ்மான் தெரிவித்தார். உண்மை குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியாததாலும் பொதுமக்களின் எதிர்ப்பு அதிகரித்து வருவதாலும் ரகுவன்ஷி மற்றும் ஏ.என். ராய் ஆகியோர் உங்கள் மீது பொய் குற்றச்சாட்டுகளை பதிவு செய்கின்றனர் என்று தீவிரவாத எதிர்ப்பு படையின் ஏ.சி.பி. வினோத் செட்டி கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரான இஹ்திஸாம்

சித்தீகியிடம் கூறியுள்ளார். இதை கூறிய சில நாட்களில் வினோத் மர்மமான முறையில் மரணமடைந்தார்.

ஏற்öகனவே குழப்படிகள் நிறைந்த ஏ.டி.எம். விசாரணைக்கு அடுத்த அடி மும்பை காவல்துறை ரூபத்தில் வந்தது. 2008 டெல்லி மற்றும் அகமதாபாத் குண்டுவெடிப்புகளில் சம்பந்தப்பட்டவர் என்று கூறி சாதிக் ஷேக் என்பரை மும்பை காவல்துறை கைது செய்தது. மும்பை ரயில் குண்டுவெடிப்பு உட்பட 2005 முதல் நாட்டில் நடைபெற்ற அனைத்து குண்டுவெடிப்புகளுக்கும் இந்தியன் முஜாஹிதீன்தான் காரணம் என்றும் மும்பை ரயில்களில் வெடிகுண்டுகளை தானும் இன்னும் நால்வரும் வைத்ததாக கூறினார் சாதிக் ஷேக்.

இந்த ஐந்து இந்தியன் முஜாஹிதீன் இயக்கத்தை சேர்ந்தவர்கள்தான் பாகிஸ்தான் நாட்டவர்கள் போல் நடித்ததாக அப்போதைய குற்றப்பிரிவு தலைவரும் தற்போதைய மும்பை கமிஷ்னருமான ராகேஷ்  மரியா தெரிவித்தார். அப்படியென்றால் இரண்டு பாகிஸ்தான் நாட்டவர்கள் கொல்லப்பட்டதாக ஏ.டி.எஸ். கூறியதே அவர்கள் யார்?

சாதிக் ஷேக்கை விசாரித்த ஏ.டி.எஸ். மும்பை குற்றப்பிரிவு கூறியதை ஏற்க மறுத்தது. ஆகஸ்ட் 2013ல் இந்திய நேபாள எல்லையில் கைது செய்யப்பட்டதாக கூறப்படும் யாசின் பட்கலும் மும்பை ரயில் குண்டுவெடிப்புகளை நடத்தியது இந்தியன் முஜாஹிதீன் அமைப்புதான் என்று கூறினார். அப்படியென்றால், மும்பை ஏ.டி.எஸ். கைது செய்த 13 நபர்களின் நிலை என்ன? யாசின் பட்கல் கூறியதை ஏ.டி.எஸ். கண்டு கொண்டதாக தெரியவில்லை.

மாலேகானில் செப்டம்பர் 2006ல் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. ஏற்கெனவே உள்ள குழப்பங் களை மேலும் சிக்கலாக்கும் விதமாக ரயில் குண்டுவெடிப்பில் கைது செய்யப்பட்ட முகம்மது அலீ மற்றும் ஆசிஃப் கான் ஆகிய இருவரை இந்த வழக்கிலும் ஏ.டி.எஸ். கைது செய்தது. ரயில் குண்டுவெடிப்பில் பயன்படுத்தியது போக எஞ்சியிருந்த ஆர்.டி.எக்ஸ். வெடிமருந்து இங்கு பயன்படுத்தப்பட்டதாக ஏ.டி.எஸ். நம்பியது. ஆனால், மாலேகான் வழக்கை விசாரித்த தேசிய புலனாய்வு குழுமம் (என்.ஐ.ஏ) இந்த கூற்றை முற்றிலுமாக மறுத்து உண்மை குற்றவாளிகளான இந்துத்துவா தீவிரவாதிகளை கைது செய்தது. மும்பை ரயில் குண்டுவெடிப்பின் மிச்சம்தான் இங்கு பயன்படுத்தப்பட்டது என்றால் ரயில் குண்டுவெடிப்பை நடத்தியது யார்?

மும்பை ரயில் குண்டுவெடிப்பு, மாலேகான் குண்டுவெடிப்பு மற்றும் புனே ஜெர்மனி பேக்கரி குண்டுவெடிப்பு குறித்து விபரங்களை கோரி பத்திரிகையாளர் ஆஷிஷ் கேதான் மும்பை உயர்நீதிமன்றத்தில் 2013ல் மனுதாக்கல் செய்தார். மாலேகான் வழக்கை மட்டுமல்லாமல் ரயில் குண்டுவெடிப்பு வழக்கிலும் ஏ.டி.எஸ்.சின் கூற்றை என்.ஐ.ஏ.வின் கூற்று மறுப்பதாக கேதான் தெரிவித்தார். அந்த மனு இன்னும் நிலுவையில் உள்ளது. “ஒரே உண்மைக்கு எப்படி இரண்டு விதமான கூற்றுகள் இருக்க முடியும்” என்பதுதான் கேதானின் கேள்வி.

ஜெர்மனி பேக்கரி வழக்கில் கைது செய்யப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஹிமாயத் பேக்கிற்கும் அந்த சம்பவத்திற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்றும் அந்த குண்டுவெடிப்பை தானும் கதீல் சித்தீகியும் நடத்தியதாக யாசின் பட்கல் தெரிவித்தார். இந்த சம்பவத்தில் பதினேழு நபர்கள் கொல்லப்பட்டனர். மரண தண்டனை விதிக்கப்பட்ட தீர்ப்பை கேட்ட ஹிமாயத் பேக், தான் இந்த சம்பவத்தில் பதினெட்டாவது பலி என்று கூறியது குறிப்பிடத்தக்கது.

ரயில் குண்டுவெடிப்பு நடைபெற்று ஒன்பது வருடங்கள் கழிந்துள்ள நிலையில் இந்த மாபாதக செயலை செய்தவர்கள் யார் என்பது இன்னும் கேள்விக்குறியாகவே உள்ளது. தவறை செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால், அப்பாவிகள் தண்டிக்கப்படுவதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்?

Comments are closed.