மும்பை தாக்குதல் எழுப்பும் சந்தேகங்கள் குறித்து எலியாஸ் டேவிட்ஸன் எழுதும் புதிய புத்தகம்!

0

புதுடெல்லி: இந்தியாவின் செப்டம்பர் 11 என்று அழைக்கப்படும் மும்பை தீவிரவாத தாக்குதலின் அதிகாரப்பூர்வ தன்மை குறித்து ஐஸ்லாந்தைச் சார்ந்த எலியாஸ் டேவிட்ஸன் புதியதொரு நூலை எழுதி வருகிறார்.இந்த நூலின் பெயர் The Betrayal of India.

‘கர்காரேயை கொன்றது யார்?’ என்ற நூலில் மஹராஷ்ட்ரா மாநில முன்னாள் ஐ.ஜி எஸ்.எம்.முஷ்ரிப் எழுப்பிய அதே கேள்விகளை அடிப்படையாக கொண்டு இந்த நூலை எலியாஸ் டேவிட்ஸன் எழுதி வருகிறார்.

10 இளைஞர்கள் இந்த தாக்குதலை நடத்தியதாக அரசு கூறுகிறது.ஆனால், அன்று மஹராஷ்ட்ரா மாநில முதல்வராக பதவி வகித்த விலாஸ்ராவ் தேஷ்முக் 20-25 பேர் தாக்குதலை நடத்தியதாக கூறியிருந்தார்.நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை 40 பேர் என்று செய்தி வெளியிட்டது.இஸ்ரேலிய பத்திரிகையான ஹாரெட்ஸ் 70 ஆயுத போராளிகள் என்று கூறியதாக டேவிட்ஸன் கூறுகிறார்.’தீவிரவாத தாக்குதலில் தொடர்புடையவர்களின் எண்ணிக்கையில் முரண்பாடு நிலவுவது சந்தேகத்தை எழுப்புகிறது.10 பேர் மூன்று தினங்கள் உலகிலேயே மிகவும் வலுவான ராணுவ பாதுகாப்பு படையினரை திக்குமுக்காட வைத்தார்கள் என்பது நம்ப முடியாதது என்று நியூயார்க் டைம்ஸ் எழுதியிருந்தது.10 பேரில் உயிருடன் பிடிபட்டவர் அஜ்மல் கசாப் மட்டுமே.மஹராஷ்ட்ரா துணை முதல்வர் 9 பேரை பிடித்துள்ளதாக கூறியிருந்தார்.ஆனால், அவர்களுக்கு என்ன நேர்ந்தது? என்று யாருக்கும் தெரியாது.அவ்வாறெனில் கொல்லப்பட்ட 9 பேர் யார்? என்ற சந்தேகம் எழுகிறது.அடையாளம் தெரியாத அளவுக்கு அந்த உடல்கள் எரிக்கப்பட்டன.கசாபைக் குறித்து அவர் போலீசிடம் கூறியவை மட்டுமே நமக்கு கிடைக்கிறது.’இவ்வாறு பல சந்தேகங்களை எழுப்பும் த பெட்ரேயல் ஆஃப் இந்தியா என்ற நூல் இவ்வாண்டு இறுதியில் வெளியாகும் என்று டேவிட்ஸன் தெரிவித்துள்ளார்.

Comments are closed.