மும்பை பா.ஜ.க தலைவரின் உருவ பொம்மையை எரித்த சிவசேனா

0

மும்பை பா.ஜ.க தலைவர் சிவசேனாவை பிசாசு என்று கூறியதற்காக அவரது உருவ பொம்மையை சிவசேனா கட்சியினர் எரித்துள்ளனர். மகாராஷ்டிரா காபினட் விரிவடைவதற்கு ஒரு நாள் முன்னதாக இந்த நிகழ்வு நடந்துள்ளது.

கட்சி சந்திப்பு ஒன்றில் பேசிய மும்பை பா.ஜ.க தலைவர் ஆஷிஷ் சேலார் சிவா சேனாவை குறிப்பிட்டு கூறாமல்,  சிறிய பிசாசு அதிக சப்தம் எழுப்புகிறது என்று மகாபாரத கதையை கூறியுள்ளார். மேலும் அந்த பிசாசு குடுவையில் அடைக்கப்படும் என்று வர இருக்கின்ற உள்ளாட்சித் தேர்தலை குறிப்பிட்டு கூறியுள்ளார். இது சிவசேனா கட்சியினரிடையே கடும் எதிர்பலைகளை கிளப்பியுள்ளது. மேலும் இது பா.ஜ.க மற்றும் சிவசேனா இடையே விரிசலை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஆஷிஷ் சேலார், தான் கூறியதை பத்திரிகையாளர்கள் திரித்து எழுதியுள்ளனர் என்று கூறியுள்ளார். மேலும் பா.ஜ.க தொண்டர்களிடையே ஒவ்வொரு தேர்தலுக்கும் ஒவ்வொரு கருவி பயன்படுத்த வேண்டும் என்பதை குறிப்பிடவே அந்த கதையை கூறியதாக அவர் தெரிவித்துள்ளார்.
விரிவுபடுத்தப்பட உள்ள மகாராஷ்டிரா காபினெட்டில் சிவசேனாவிற்கு ஏதேனும் இடங்கள் கொடுக்கப்பட இருகின்றனவா என்று இதுவரை எந்த செய்திகளும் இல்லை.

Comments are closed.