மும்பை வழக்கில் குற்றவாளியாக சேர்க்கப்பட்டார் ஹெட்லி

0

நாட்டையே உலுக்கிய மும்பை தாக்குதல்கள் தொடர்பான வழக்கில் அமெரிக்காவை சேர்ந்த டேவிட் கோல்மென் ஹெட்லியை குற்றவாளியாக நீதிமன்றம் சேர்த்துள்ளது. சம்பவம் நடந்து ஏழு வருடங்கள் கழிந்துள்ள நிலையில் தற்போதுதான் அதன் முக்கிய சூத்திரதாரியாக கூறப்படும் ஹெட்லி குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வழக்கில் ஹெட்லியை குற்றவாளியாக சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கையை மும்பை காவல்துறை முன்வைத்தது. இதனை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் டிசம்பர் 10 அன்று வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் ஹெட்லியை ஆஜர்படுத்தவும் உத்தரவிட்டுள்ளது. டேவிட் ஹெட்லியை கைது செய்த அமெரிக்க காவல்துறை அவருடன் ஒரு உடன்படிக்கையை மேற்கொண்டது. இதன் மூலம் ஹெட்லி தனது குற்றங்களை ஒப்புக் கொண்ட போதும் அவனை இந்தியாவிற்கு அனுப்ப மாட்டோம் என்ற உத்தரவாதம் கொடுக்கப்பட்டது. 35 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட டேவிட் ஹெட்லி தற்போது அமெரிக்க சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
லஷ்கர் இ தய்பா இயக்கத்திற்காக மும்பையில் தாக்குதல் நடத்தப்படும் இடங்களை வேவுபார்த்து கொடுத்தாக கூறப்படும் ஹெட்லி அமெரிக்காவின் போதை மருந்து தடுப்பு பிரிவிற்கு உளவாளியாக செயல்பட்டுள்ளார். இந்திய விசாரணை அதிகாரிகள் ஹெட்லியை சில நாட்கள் விசாரித்த போதும் அவர்களால் பெரிய அளவில் எதையும் சாதிக்க முடியவில்லை.

Comments are closed.