முஸஃபர்நகர் கலவர வழக்கில் தாய்-மகனை உயிரோடு எரித்துக் கொன்ற 10 குற்றவாளிகள் விடுதலை

0

2013 ஆம் ஆண்டு நடைபெற்ற முஸஃபர்நகர் கலவரத்தில் 30 வயது பெண்மணி ஒருவரையும் அவரது 10 வயது மகனையும் உயிரோடு எரித்துக் கொன்றவர்களை செசன்ஸ் நீதிமன்ற நீதிபதி அரவிந்த் குமார் உபாத்யாய் கூடுதல் ஆதாரங்கள் வேண்டும் என்று கூறி விடுதலை செய்துள்ளார்.

இவர்கள் லான்க் கிராமத்தில் ஒரு தாய்-மகனை எரித்துக் கொன்றதோடு பலரை கொடூரமாக தாக்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கலவர வழக்கை விசாரிக்க அமைக்கபட்ட தனிப்படை இந்த 10 பேரை குற்றவாளிகள் என்று குற்றபத்திரிக்கை தாக்கல் செய்தது.

இவர்கள் விடுதலையானதும் அப்பகுதி பா.ஜ.க. விழாக்கோலம் பூண்டது. மீண்டும் முஸஃபர்நகர் பகுதியில் தேர்தல் வர இருக்கும் இந்த நேரத்தில் மக்கள் மத்தியில் இது ஒரு தவறான செய்தியை எடுத்துச் செல்லும் என்று நம்பப்படுகிறது.

தொடர்புடைய செய்திகளைப் படிக்க இங்கே கிளிக் செய்யவும் 

 

Comments are closed.