முஸஃபர்நகர் வழக்கு: மத்திய அமைச்சர் நீதிமன்றத்தில் சரண்டர்

0

முஸஃபர்நகர் கலவர வழக்கில் மத்திய அமைச்சர் சஞ்சீவ் பால்யான் இன்று (டிசம்பர் 18) முஸஃபர்நகர் நீதிமன்றத்தில் ஆஜர் ஆனார். முன்னதாக வழக்கு சம்பந்தமாக நீதிமன்றத்தில் ஆஜர் ஆகாததற்கு பால்யானுக்கு எதிராக நீதிமன்றம் ஆணை பிறப்பித்திருந்தது.
நவம்பர் 24 அன்று பிறப்பித்த உத்தரவில் சஞ்சீவ் பால்யான், பாரதிய ஜனதா நாடாளுமன்ற உறுப்பினர்கள் பரதேந்திரா சிங், சாத்வி பிராச்சி, பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர் சுரேஷ் ரானா உள்ளிட்டவர்களை டிசம்பர் 18ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர் ஆகுமாறு நீதிபதி உத்தரவிட்டார். குற்றம்சாட்டப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர் ஆகாதது வழக்கு விசாரணையை பாதிப்பதாக அரசு தரப்பு குற்றம்சாட்டியிருந்தது.
இதனை தொடர்ந்து சஞ்சீவ் பால்யான் இன்று நீதிமன்றத்தில் ஆஜர் ஆனார். ஆஜரானதை தொடர்ந்து பால்யானுக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.
தடை உத்தரவுகளை மீறியது, அரசு அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்தது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் இவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ளன. முஸ்லிம்களுக்கு எதிராக மக்களை திரட்டுவதில் முக்கிய பங்காற்றிய மகாபஞ்சாயத்தில் சஞ்சீவ் பால்யான் கலந்து கொண்டார். தொடர்ந்து நடைபெற்ற கலவரத்தில் ஏறத்தாழ 60 முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். ஐம்பதாயிரம் மக்கள் தங்கள் வீடுகளை விட்டும் துரத்தப்பட்டனர்.

Comments are closed.