முஸாஃபர் நகர் கலவர வழக்கு: குற்றவாளிகள் ஆஜராகாததால் கடும் எச்சரிக்கை

0

உத்தரப் பிரதேச மாநிலம் முஸாஃபர் நகரில் கடந்த 2013ஆம் ஆண்டு இஸ்லாமியர்கள் மீது காவி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி கலவரம் செய்தனர். இந்த கலவரத்தில் 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

ஆயிரக்கணக்கானோர் அப்பகுதியைவிட்டு வெளியேறினர். இந்த விவகாரம் தேசிய அளவில் பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணைகள் நடைபெற்றது. இந்த கலவரத்தில் ஷாநவாஸ் என்ற இளைஞர்,காவி பயங்கரவாதிகளால் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக வழக்கு விசாரணை நடைபெற்றது.

இந்த வழக்கில் ரவிந்தர், பிரெலாத், பிஷன் சிங், டெண்டு, ஜிதேந்தர் மற்றும் தேவேந்தர் ஆகியோர் குற்றவாளிகள் எனக் கண்டுபிடிக்கப்பட்டனர். இந்த வழக்கு தொடர்பான விசாரனை நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், குற்றவாளிகள் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இதனால் நீதிபதி ராகேஷ் கவுதம், அவர்கள் மீண்டும் ஆஜராகாவிட்டால் அவர்களின் சொத்தக்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டார். அத்துடன் இது தொடர்ந்தால் அவர்களை கைது செய்ய வாராண்ட் பிறப்பிக்கப்படும் என்று எச்சரித்தார்.

Comments are closed.