முஸ்லிம்களுக்கு எதிரான விளம்பரங்களை காட்சிப்படுத்த அமெரிக்க நீதிபதி அனுமதி!

0
நியூயார்க்: முஸ்லிம்கள், யூதர்களை கொல்வதாக சித்தரிக்கும் சர்ச்சைக்குரிய விளம்பரத்தை நியூயார்க் மாநகர போக்குவரத்து கழக பேருந்துகளில் காட்சிப்படுத்த அமெரிக்க ஃபெடரல் நீதிபதி அனுமதித்துள்ளார்.இந்த விளம்பரம், தீவிரவாதத்தையும், உடனடி வன்முறையையும் தூண்டும் என்ற நியூயார்க் மாநகர போக்குவரத்து கழகத்தின்  வாதத்தை நீதிபதி நிராகரித்தார்.
மன்ஹாட்டன் நீதிபதியான ஜான் கோர்டீல் தனது தீர்ப்பில்,’அமெரிக்க ஃப்ரீடம் டிஃபன்ஸ் இன்ஸியேட்டிவின் விளம்பரம் ஏற்கனவே ஷிகாகோ மற்றும் சான்பிரான்ஸிஸ்கோவில் காட்சிப் படுத்தப்பட்டுள்ளது.அரசியல் சாசன ரீதியான கருத்து சுதந்திரத்தின் ஒரு பகுதி இது’ என்று குறிப்பிட்டுள்ளார்.
தலையையும், முகத்தையும் ஸ்கார்ஃபால் மறைத்த ஒருவருடைய புகைப்படத்துடன், யூதர்களை கொல்வது இறைவனை நெருங்குவதற்கான வணக்கம் என்று குறிப்பிடும் அவதூறான வாசகம் அடங்கியதே இந்த சர்ச்சைக்குரிய விளம்பரமாகும்.ஃபலஸ்தீனில் ஹமாஸை தொடர்புபடுத்தும் வகையில் இந்த வாசகம் விளம்பரத்தில் உபயோகிக்கப்பட்டுள்ளது.’அது அவர்களுடைய ஜிஹாத்!உன்னுடையது எது?’ என்ற கேள்வியை இந்த விளம்பரம் எழுப்புகிறது.நீதிபதியின் இந்த சர்ச்சைக்குரிய தீர்ப்புக்குறித்து நியூயார்க் மாநகர போக்குவரத்துக் கழக பிரதிநிதி ஆடம் லிஸ்பர்க் அதிருப்தி தெரிவித்துள்ளார்.
அமெரிக்க ஃப்ரீடம் டிஃபன்ஸ் இன்ஸியேட்ட்விற்கு தலைவராக இருப்பவர் சர்ச்சைக்குரிய யூத ப்ளாகர் பாமெலா கெல்லர் ஆவார்.இவர் முஸ்லிம்களுக்கு எதிரான துவேசத்தை பரப்புரைச் செய்வதில் பிரசித்திப் பெற்றவர்.

Comments are closed.