முஸ்லிம்களுக்கு வீடு தர மறுத்தவர்கள் கைது செய்யப்பட்டு விடுதலை

0

மஹாராஷ்டிராவில் வாசை (மேற்கு) பகுதியில் உள்ள Happy Jivan Co-operative Housing Society இல் முஸ்லிம் ஒருவருக்கு வீடு விற்பனை செய்வது அந்த ஹவுசிங் சொசைடியில் உள்ள சிலர் எதிர்த்து வந்தனர். மேலும் தங்களது சமூகத்தை சேர்ந்தவருக்கு தான் அந்த வீட்டை விற்பனை செய்ய வேண்டும் என்றும் வீட்டு உரிமையாளரை நிர்பந்தித்தனர். (பார்க்க செய்தி)

இந்நிலையில் அந்த ஹவுசிங் சொசைடியில் உள்ள 9 பேரை காவல்துறை கைது செய்து நீதிமன்றம் முன் ஆஜர் படுத்தியது. மத உணர்வுகளை புண்படுத்தியதாக அவர்கள் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. பின்னர் அவர்கள் பிணை வழங்கி விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் மீது குறிப்பிட்த வீட்டை விலைக்கு வாங்கியவர் காவல்நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் இவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அதனை அடுத்து 11 பேர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டதாகவும் காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

Comments are closed.