முஸ்லிம்கள் குறித்து அநாகரிக கருத்து: ஹெச்.ராஜா போல் பல்டியடித்த பாஜக தலைவர்

0

முஸ்லிம்களின் உடைகளை களைந்தால் அடையாளம் தெரியும் என்று பேசிய கேரள மாநில பாஜக தலைவர் பிஎஸ். ஸ்ரீதரன் பிள்ளைக்கு கடும் எதிர்ப்பு.

பாலக்கோட் தாக்குதலில் கொல்லப்பட்டவர்கள் எத்தனை பேர் என்று காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள் மத்திய அரசை கேட்டு வருகின்றனர். ஆனால், இது பாதுகாப்பு விசயம் என்பதால் தெரிவிக்க முடியாது என மத்திய அரசு கூறிவிட்டது.

இந்நிலையில் அவர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்கும் வகையில், கேரள மாநிலம் அட்டிங்கல்லில் நடந்த தேர்தல் பேரணியில் பேசிய கேரள மாநில பாஜக தலைவர், ஸ்ரீதரன் பிள்ளை, பாலக்கோட் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களை எப்படி அடையாளம் காண முடியும்? ஆடையை களைந்து பார்த்தால், முஸ்லிம் என்று தெரிந்து கொள்ளலாம் என்று கூறியியுள்ளார்.

ஸ்ரீதரன் பிள்ளையின் இந்த சர்ச்சைக்குரிய பேச்சை தேர்தல் ஆணையத்திடம் இடதுசாரிகள் புகார் அளித்துள்ளனர்.

ஆனால், தாம் அவ்வாறு பேசவே இல்லை என ஸ்ரீதரன் பிள்ளை மறுத்துள்ளார். இது மிக பெரிய பொய் என்று கூறிய அவர், முஸ்லிம்களுக்கு எதிராக தாம் கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை என ஹெச். ராஜாவை போல் பல்டியடித்துள்ளர்.

Comments are closed.