முஸ்லிம்கள் தேவைப்பட்டால் பாஜகவுடன் கை கோர்க்கவும் தயங்கக்கூடாது: காங்கிரஸ் தலைவர்

0

கர்நாடகாவை சேர்ந்த காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களின் ஒருவரான ரோஷன் பெய்க். சமீப காலமாக கட்சித் தலைமையுடன் அதிருப்தியில் உள்ளார். இந்த நிலையில் முஸ்லிம்கள், பாஜகவுடனும் கை கோர்க்க வேண்டும் என்று பெய்க் பேசியுள்ளார்.

செய்தியார்களிடம் பேசிய பெய்க்: “தேவைப்பட்டால் பாஜகவுடன் கை கோர்க்கவும் முஸ்லீம்கள் தயங்கக் கூடாது. காங்கிரஸ் கட்சி கர்நாடகத்தில் ஒரே ஒரு முஸ்லிமுக்குத்தான் சீட் கொடுத்தது. எனவே பாஜகவுடன் கை கோர்ப்பதில் தவறு எதுவுமில்லை. தேவைப்பட்டால் நான் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகும் முடிவை எடுப்பேன். இந்த கட்சியில் முஸ்லிம்கள் தொடர்ந்து அவமானத்தை சந்தித்து வருகின்றனர். நாங்கள் கெளரவமாக வாழ விரும்புகிறோம். எங்கு மரியாதை கிடைக்குமோ அங்கு வாழவே விரும்புகிறோம்” என்று பேசியுள்ளார்.

Comments are closed.