முஸ்லிம்கள் மத்தியில் விவாகரத்து 0.56%: கணக்கெடுப்பு

0

ஊடகங்கள் அனைத்தும் முத்தலாக் குறித்து நிறுத்தாமல் முழங்கிக் கொண்டிருக்கும் வேலையில் 2011 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படி முஸ்லிம்கள் மத்தியில் விவாகரத்து என்பது இந்துக்களை விட குறைவு என்றும் அது வெறும் ௦.56% தான் என்றும் தெரிய வந்துள்ளது.

இந்த கணக்கெடுப்பில் இந்து சமுதாய மக்களிடையே விவாகரத்து 0.76% இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. ஆனால் பாரதிய முஸ்லிம் மகிலா அந்தோலன் அமைப்பு முஸ்லிம்கள் மத்தியில் விவாகரத்து என்பது 11% என்று தெரிவித்துள்ளது. ஆனால் முத்தலாக் விஷயத்தில் அரசிடமோ அல்லது சட்டக் கமிஷனிடமோ எந்த ஒரு தகவலும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

BMMA அமைப்பின் இந்த கணக்கெடுப்பின் நம்பகத்தன்மை குறித்து பல கேள்விகள் எழுந்தாலும் அவர்களின் இந்த கணக்கெடுப்பு என்பது இந்தியாவில் உள்ள மொத்த முஸ்லிம் மக்கள் தொகையில் முதலில் 10 மாநிலங்களில் உள்ள வெறும் 4710 முஸ்லிம் பெண்களிடமும், இரண்டாம் முறை 8 மாநிலங்களில் உள்ள 117 பெண்களிடம் மட்டுமே எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதுவே இந்த சதவிகித உயர்வுக்கு காரணம் என்று கூறப்படுகிறது.

உச்ச நீதிமண்டர்த்தின் அரசியல் சாசன பெஞ்ச் முஸ்லிம்களிடையே பலதார மனம், நிக்காஹ் ஹலாலா மற்றும் முத்தலாக் முறையை தடை செய்வது குறித்த மனுக்களை விசாரிக்க இருக்கும் பட்சத்தில் அரசு இவ்வவிதயத்தில் செலுத்தும் அக்கறை சந்தேகத்திற்குரியதாக இருக்கிறது என்று பலதரப்பினர் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்தியாவில் குழந்தை திருமணம் தடை செய்யப்பட்டுள்ள போதும், 1.2 கோடி சிறுவர்கள் தங்களின் 10 வயதிற்குள்ளேயே திருமணம் முடித்து வைக்கப்படுகின்றனர். இதில் 84% குழந்தை திருமணங்கள் இந்துக்களிடையே நடைபெறுவது. ஆனால் இது குறித்து அரசு அக்கறை கொள்ளவில்லை என்று ஃபைஸான் முஸ்தஃபா தெரிவித்துள்ளார்.

முஸ்லிம்கள் மத்தியில் முத்தலாக் பழக்கத்தால் பாதிக்கப்பட்ட பெண்களின் நிலை குறித்து BMMA குறிப்பிடும் வேலையில் இந்துக்கள் மத்தியில் கணவனால் கைவிடப்பட்ட பெண்களின் நிலை குறித்து பேச அனைவரும் மறுக்கின்றனர் என்று அவர் கூறியுள்ளார். இந்துக்கள் மத்தியில் உள்ள பலதாரமணம், வன்முறை மற்றும் கணவனால் கை விடப்படுவது குறித்து ஏன் யாருக்கும் கவலை இல்லை என்ற கேள்வியையும் அவர் எழுப்பியுள்ளார்.

இது போன்ற அறிவியல் பூர்வமற்ற ஆய்வின் அடிப்படையில் உச்ச நீதிமன்றம் அல்லது அரசு முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டுமா என்ற கேள்வியையும் அவர் இங்கு எழுப்பியுள்ளார். பல்வேறு சமூகத்தில் உள்ள பெண்களின் நிலை குறித்து ஒரு ஒப்பீட்டாய்வு ஒன்றை நடத்துமாறு சட்டக் கமிஷனை உச்ச நீதிமன்றம் கேட்டுக்கொள்ள வேண்டும் என்றும் இதில் அனைத்து சமூக பொருளாதார மற்றும் சாதி வாரியான கணக்கெடுப்பின் தகவல்களை அரசு வெளியிட வேண்டும் என்றும் முஸ்தஃபா கூறியுள்ளார். இந்த ஆய்வானது மதம், இனம், சாதி பாகுபாடின்றி அனைத்து பெண்களின் நிலை குறித்து விவாதிக்க தொடக்க புள்ளியாக இருக்கட்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து சன்னி இறையியலின் துணை பேராசிரியர் முஃப்தி சாஹித் அலி கான், கருத்து தெரிவிக்கையில், ஒரு வேலை முத்தலாக் முறையை அவர்கள் கூறுவது போல மனிதத் தன்மையற்றது என்றும் பெண்களுக்கு எதிரானது என்றும் வைத்துக் கொண்டாலும் கூட அதனை அரசியல் சாசனத்திற்கு எதிரானது என்று கூற முடியாது என்று கூறியுள்ளார். ஜெயின் சமுதாக சடங்குகளில் ஒன்றான சாகும் வரை உண்ணாவிரதம் இருப்பது நீதிமன்றத்தில் வந்த போது உச்ச நீதிமன்றம் அந்த சம்பிரதாயத்தை அந்த மக்கள் தங்களில் வழிபாட்டு முறையை கடைபிடிக்க உரிமையுடையவர்கள் என்று கூறி அனுமதித்தது. ஆனால் முஸ்லிம்களை பொறுத்தவரை அவர்களின் வழிபாட்டு முறையில் உச்ச நீதிமன்றம் தலையிடலாமா என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

Comments are closed.