முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்த சதித்திட்டம்:ஜெர்மனியில் நான்கு பேர் கைது

0

பெர்லின்:முஸ்லிம் குடியேற்றவாசிகள் மற்றும் மஸ்ஜிதுகள் மீது தாக்குதல் நடத்த சதித்திட்டம் தீட்டிய தீவிர வலதுசாரி அமைப்பின் உறுப்பினர்கள் நான்கு பேரை ஜெர்மன் காவல்துறை கைது செய்தது.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் காவல்துறை நடத்திய தீவிர தேடுதல் வேட்டையில் தீவிர வலதுசாரி அமைப்பான ‘ஓல்ட் ஸ்கூல் சொசைட்டி’ என்ற ஓ.எஸ்.எஸ்ஸின் உறுப்பினர்கள் நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.கைது செய்யப்பட்டவர்களில் இவ்வமைப்பின் தலைவர் மற்றும் துணைத்தலைவரும் அடங்குவர்.
இது குறித்து ஃபெடரல் ப்ராஸிக்யூட்டர் கூறுகையில்,’குடியேற்றவாசிகள், மஸ்ஜிதுகள், நாட்டின் பிரபலமான முஸ்லிம்கள் மீது இவர்கள் தாக்குதல் நடத்த சதித்திட்டம் தீட்டியுள்ளனர்.கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து வெடிப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன’ என்று தெரிவித்தார்.
கடந்த சில ஆண்டுகளாக செமிட்டிக் இனத்தவர்கள் மீதான எதிர்ப்புணர்வு ஜெர்மனியில் அதிகரித்து வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.கடந்த ஜனவரி மாதம் ஆயிரக் கணக்கானோர் பங்கேற்ற முஸ்லிம் எதிர்ப்பு பேரணி ஜெர்மனியில் நடைபெற்றது.இதனைத்தொடர்ந்து தீவிர வலதுசாரி அமைப்புகள் மீதான கண்காணிப்பை ஜெர்மன் உளவுப் பிரிவு தீவிரப்படுத்தியுள்ளது.

Comments are closed.