முஸ்லிம் சிறுவன் மீது பஜ்ரங்தள் குண்டர்கள் தாக்குதல்: மத்திய பிரதேசத்தில் பதற்றம்

0

மத்திய பிரதேசம் சலாமத்பூர் பகுதியில் 15 வயது முஸ்லிம் சிறுவனை பஜ்ரங்தள் உறுப்பினர்கள் அவர் தலித் பெண்ணுடன் ஓடிச் சென்று திருமணம் செய்ய இருந்தார் என்று கூறி கடுமையாக தாக்கியுள்ளனர். இந்த தாக்குதலில் அவர் மயக்கமுற்றார்.

காயமடைந்த அந்த சிறுவனை காவல்துறையினர் பாலியல் துன்புறுத்தல் மற்றும் தலித்களுக்கு எதிரான கொடுமைகள் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.

தன மீதான குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள அந்த சிறுவன்ர் தனக்கு அது போன்ற எந்த ஒரு எண்ணமும் இல்லை என்றும் தான் அப்பெண்ணிடம் பேருந்து நிலையத்தில் வைத்து பேசிக்கொண்டு தான் இருந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

இவர் மீதான இத்தாக்குதலை நேரில் பார்த்தவர்கள் காவல்துறையினர் முன்னிலையிலேயே அவரை பஜ்ரங்தள் அமைப்பினர் தாக்கினர் என்று கூறியுள்ளனர். தாக்குதலில் அவர் மயக்கமுற்றதும் காவல்நிலையத்திற்கு அவர் எடுத்துச் செல்லப்பட்டுள்ளார்.

இது குறித்து சலாமத்பூர் காவல் நிலைய பொறுப்பு அதிகாரி எம்.பி.யாதவ் கூறுகையில், இந்த தாக்குதல் தொடர்பாக கோபால் ரதோர், அனுப் அகர்வால், சஞ்சீவ் ஷேஜ்வர் ஆகிய மூன்று பஜ்ரங்தள் அமைப்பு உறுப்பினர்கள் மீது தாக்குதல், ஆபாசம், மிரட்டல், பொதுவான நோக்கத்துடன் குற்றம் புரிதல் ஆகிய பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்திருப்பதாக கூறியுள்ளார்.

அந்த முஸ்லிம் சிறுவன் போபாலில் உள்ள சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த தாக்குதல் மற்றும் அதனை சொடர்ந்த முஸ்லிம் சிறுவன் கைது ஆகியவற்றை அடுத்து சலாமத்பூரில் பதற்றம் நிலவுகிரது. இதனால் அங்கு காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

Comments are closed.