முஸ்லிம் பகுதிகளுக்குள் சென்று பாகிஸ்தான் எதிர்ப்பு கோஷங்களை எழுப்பும் கலாச்சாரம்: கண்டித்த உபி மாஜிஸ்திரேட்

0

உத்திர பிரதேச மாநிலம் பரேலி மாவட்ட மாஜிஸ்திரேட், தனது ஃபேஸ்புக் பக்கத்தில் முஸ்லிம்கள் பகுதிகளுக்கு சென்று பாகிஸ்தான் எதிர்ப்பு கோஷமிடுபவர்களின் நோக்கம் குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.

அவர் தனது பதிவில், “சமீபத்தில் விசித்திரமான பழக்கம் ஒன்று பிரபலமடைந்துள்ளது. அது முஸ்லிம்கள் அதிகமாக வசிக்கும் பகுதிகளுக்கு சென்று பாகிஸ்தான் எதிர்ப்பு கோஷங்களை முழங்குவது. ஏன் சகோதரர்களே? அவர்கள் என்ன பாகிஸ்தானியர்களா? இதே போன்ற ஒன்று தான் பரேலியின் கைலம் கிராமத்திலும் நடைபெற்றது. கற்கள் வீரப்பட்டன. முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது.” என்று பதிவு செய்துள்ளார்.

மேலும் பத்திரிகையாளர்களிடம் தனது கருத்தை பகிர்ந்துகொண்ட விக்ரம் சிங், “தற்போது நடைபெறும் இந்த சம்பவங்களால் தான் கோபமுற்றதாகவும் காயமடைந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.  இன்னும் அவர் தனது மற்றொரு பதிவில், பாகிஸ்தானைவிட சீனா தான் நமக்கு பெரிய எதிரி என்றும் தங்களை தேசியவாதிகள் என்று கூறிக்கொள்ளும் இவர்கள் ஏன் மூவர்ண கொடியை ஏந்தி சீன எதிர்ப்பு கோஷங்களை எழுப்புவதில்லை என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

இவரது இந்த பதிவு சமூக வலைதளத்தில் கொண்டாடப்படும் வேலையில் உத்திர பிரதேச பாஜக அரசின் எதிர்ப்பை அது சம்பாதித்துள்ளது. விக்கரம் சிங்கின் இந்த பதிவு குறித்து கருத்து தெரிவித்துள்ள உத்திர பிரதேச துணை முதல்வர் கேஷவ் பிரசாத் மவ்ரியா விக்ரம் சிங்கின் இந்த கருத்து கவனிக்கப்பட்டுள்ளது என்றும் அது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

Comments are closed.