முஸ்லிம் பெண்களை கவர்ந்து திருமணம் செய்யப்போவதாக ஆர்.எஸ்.எஸ். ஆதரவு இந்துத்வா குழு அறிக்கை

0

பெரும்பாலும் அனைத்து முக்கிய ஊடகங்களாலும் லவ் ஜிஹாத் என்று போலிப் பரப்புரை செய்யப்பட்ட ஹாதியா வழக்கில் இந்துத்வ கும்பல் கூறுவது போல எந்த கட்டாய மதமாற்றமும் இல்லை என்று ஹாதியாவின் வாக்குமூலம் வாயிலாகவே பதில் கிடைத்துவிட்டது. இது தேசம் முழுவதிலும் பேசப்படும் இந்த வேலையில் இந்த லவ் ஜிஹாத் போலிப் பரப்புரையை மேலும் தூக்கிப் பிடித்துக் கொண்டு “முஸ்லிம்களுக்கு அவர்கள் மொழியிலேயே பாடம் கர்ப்பிப்போம்” என்று கூறி முஸ்லிம் பெண்களை இந்து ஆண்களுக்கு திருமணம் செய்ய திட்டமிட்டுள்ளதாக ஆ.எஸ்.எஸ். ஆதரவு குழுவான ஹிந்து ஜாக்ரன் மன்ச் அறிவித்துள்ளது.

நரேந்திர மோடியின், ‘பேட்டி பச்சாவோ, பேட்டி படாவோ” கோஷத்தை போன்று இந்த அமைப்பு “பேட்டி பச்சாவோ, பஹு லாவோ” என்கிற கோஷத்தை முன்வைத்துள்ளது. மகளை காப்பாற்றுங்கள், மருமகளை கொண்டு வாருங்கள் என்பது இவர்களின் இந்த கோஷத்திற்குப் பொருள். இவர்களின் இந்த திட்டத்தின் மூலம் சுமார் 2100 முஸ்லிம் பெண்களை இந்து ஆண்களுக்குத் திருமணம் செய்து வைக்க இருப்பதாகவும் அப்படி திருமணம் செய்துகொள்பவர்களுக்கான பொருளாதார உதவி பாதுகாப்பு என்று அனைத்து உதவிகளை தாங்கள் செய்ய இருப்பதாக ஹிந்து ஜாக்ரன் மன்ச் அமைப்பு தெரிவித்துள்ளது.

இது குறித்து அந்த அமைப்பின் தலைவர் அஜ்ஜூ சவ்ஹான் தெரிவிக்கையில், “அவர்களுக்கு அவர்கள் மொழியிலேயே நாங்கள் பாடம் கற்பிப்போம்.” என்று கூறியுள்ளார். மேலும் தங்களின் இந்த திருமண திட்டத்திற்குப் பின் ஜனத்தொகை கட்டுப்பாடும் உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதே போன்றே கடந்த வாரம், முஸ்லிம்கள் லவ் ஜிஹாதை நிறுத்தாவிட்டால் விஷ்வ ஹிந்து பரிஷத் தங்களின் பஜ்ரங்தள் குண்டர்களை முஸ்லிம் பெண்களை கவர அனுப்ப இருப்பதாக கூறியிருந்தது.

இது குறித்து விஷ்வ ஹிந்து பரிஷத் தலைவர் கோபால் கூறுகையில், “முஸ்லிம்கள் லவ் ஜிஹாதை நிறுத்த வேண்டும். இல்லையென்றால் நங்கள் எங்களது பஜ்ரங்தள் இளைஞர்களை முஸ்லிம் பெண்களை கவர அனுப்புவோம். நாங்கள் காதலுக்கு எதிரிகள் அல்ல. எங்கள் பெண்கள் ஷாருக் மற்றும் ஷிரிஷ் அல்லது சல்மான் மற்றும் சுனில் ஆகியோர் ஒன்று என்று நினைத்து கொண்டுள்ளனர், ஆனால் இந்து ஆண்கள் ஒருமுறை தான் திருமணம் செய்து கொள்வார்கள் என்றும் மற்றவர்கள் பலமுறை திருமணம் செய்துகொள்வார்கள் என்றும் அவர்களுக்குத் தெரியாது.” என்று கூறியுள்ளார்.

Comments are closed.