முஸ்லிம் மாணவிகள் தலை முக்காடு அணிய தனியார் பள்ளியில் தடை

0

மணிப்பூர் மாநிலம் இம்பால் பகுதியில் உள்ள Brighter Academy என்ற தனியார் பள்ளியில் முஸ்லிம் மாணவிகள் தலை முக்காடு அணிய தடை விதித்துள்ளது. அப்பள்ளியின் இந்த முடிவிற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பல மாணவிகள் இந்த முடிவினால் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர் என்றும் இன்னும் பல மாணவிகள் பள்ளிக்கு செல்வதையே நிறுத்திவிட்டனர் என்றும் All Manipur Muslim Girl Students’ Union (AMMGSU) அமைப்பின் தலைவர் ருஸ்கர் சவுத்ரி தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில் இந்தியா ஒரு மதசார்பற்ற நாடு என்றும் முஸ்லிம் பெண்கள் தங்கள் தலையை மறைப்பது முஸ்லிம்களுக்கு கட்டயாம் எனவும் கூறியுள்ளார். மேலும் இத்தகைய உடை கட்டுபாட்டை பள்ளியின் வருடாந்திர சேர்க்கைக்கு பின்னரே அறிமுகப்படுத்தியுள்ளனர் என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்த உடை கட்டுப்பாட்டு முடிவை எதிர்த்து மாணவர்களின் கருத்துக்களையும் பள்ளி முதல்வர், கல்வி அமைச்சர் மற்றும் துணை கமிஷனர் ஆகியோரிடம் முறையிட்டும் எந்த பலனும் இதுவரை இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

பள்ளியின் இந்த முடிவு மாற்றப்படும் வரை போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளோம் என்றும் இது குறித்து நீதிமன்றத்தின் உதவியையும் நாட உள்ளோம் என்றும் அவர் கூறியுள்ளார்.

Comments are closed.