முஸ்லிம் வீட்டில் கொள்ளையடித்த உத்திர பிரதேச காவல்துறை

0

உத்திர பிரதேச மாநிலதில் வசிக்கும் முஸ்லீம்கள் மீது பல்வேறு அடக்குமுறைகள் ஆளும் பாஜக ஆட்சியில் நடைபெற்று வருகிறது. சட்டத்திற்கு வெளியானா காவல்துறை கொலைகள் முஸ்லீம்கள் மீது நடத்தப்படுவது வழக்கமாகிப்போன நிலையில் முஸ்லிம் ஒருவர் வீடு புகுந்து காவல்துறையினர் கொள்ளையடித்த சம்பவம் தற்போது நடைபெற்றுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலத்தின் புலந்த்சாஹர் நகரத்தில் வசித்து வருபவர் முகம்மது முஸ்தகீம். இவர் இஸ்லாமிய அமைப்பு ஒன்றில் நிர்வாகியாகவும் இருக்கிறார். இந்நிலையில் இவரது வீட்டில்ஆயுதங்கள் இருப்பாதாக கூறி சோதனை நடத்த வந்ததாக கூறிய உபி காவல்துறை அவரது வீட்டில் இருந்த விலை உயர்ந்த பொருட்கள், ரூ. 84 ஆயிரம் ரொக்கம், 2 இருசக்கர வாகனங்கள் முதலியவற்றை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

காவல்துறையின் இந்த அராஜகப் போக்கை தடுக்க முயன்ற முஸ்தகீமைத் உபி காவல்துறை தாக்கியதுடன், அவரைக் கைதும் செய்துள்ளனர். உ.பி. காவல்துறையின் இந்த அராஜகம் குறித்து கைது செய்யப்பட்ட முஸ்தகீமின் குடும்பத்தினர் பல்வேறு மட்டங்களில் புகாரளித்தனர்.

இவர்களது புகாரை எவரும் கண்டுகொள்ளாத நிலையில் இறுதியில் மாவட்ட நீதிபதியிடம் முஸ்தகீம் குடும்பம் முறையிட்டுள்ளது. அப்போது பிரச்சனை குறித்து விசாரித்த மாவட்ட நீதிபதி, முஸ்தகீம் வீட்டிற்குள் புகுந்த கொள்ளையில் ஈடுபட்ட குஞ்சா காவல்நிலைய துணை ஆய்வாளர்கள் 5 பேர் உள்ளிட்ட 13 போலீசார் மீது உடனடியாக வழக்கு பதிவு செய்து, அவர்களைக் கைது செய்யுமாறு உத்தரவிட்டுள்ளார். இதைடுத்து இந்த கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட 13 காவல்துறையினர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.

Comments are closed.