முஸ்லீம்களுக்காக மம்தாவின் அரசியல் மேற்குவங்க மாநிலத்திற்கே பாதிப்பு: பாஜக பொதுச்செயலாளர்!

0

முஸ்லீம்களை திருப்திப்படுத்த அவர் செய்யும் அரசியல் இந்த மாநிலத்தையே பாதிப்பதாக பாஜக பொதுச் செயலாளர் கைலாஷ் விஜய்வர்கியா குற்றம்சட்டியுள்ளார். 

மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் பாஜக பொதுச் செயலாளர் கைலாஷ் விஜய்வர்கியா,  நேற்று கட்சி தொண்டர்களிடையே உரையாற்றினார். அப்போது பேசிய அவர், மேற்கு வங்க முதல்வரும், திரிணாமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி மீது குற்றச்சாட்டுகளை எழுப்பினார். மேலும் பேசிய அவர் “மம்தா மக்களுக்கு சேவை செய்வதை விட, தன் பதவியை பாதுகாப்பதில் குறிக்கோளாக  உள்ளார்.

மேற்குவங்கம் இந்தியா நாட்டில் இல்லை என்பது போல அவர் நடந்து கொள்கிறார். அவரிடம் உள்ள ஈகோ திருப்திப்படுத்துவது நாட்டின் வளர்ச்சிக்கு இடையூறாக உள்ளது. வங்க மொழி பேசும் மக்களுக்கும் அதனை பேசாத மக்களுக்கும் அவர் பிரிவினையை ஏற்படுத்துகிறார். முஸ்லீம்களை திருப்திப்படுத்த அவர் செய்யும் அரசியல் இந்த மாநிலத்தையே பாதிக்கிறது. மோடியின் மத்திய அரசு திட்டங்கள் அனைத்தையும் மம்தா எதிர்த்து கடுமையாக விமர்சித்தார்” என்று கைலாஷ் விஜய்வர்கியா கடுமையாக மம்தாவை தாக்கி பேசியுள்ளார்.

Comments are closed.