முஸ்லீம்கள் மக்கள் தொகை கடும் வீழ்ச்சி: 2011 புளிவிவரம் அறிக்கை

0

முஸ்லீம்கள் மக்கள் தொகை கடும் வீழ்ச்சி: 2011 புளிவிவரம் அறிக்கை

நாட்டில் முஸ்லிம்களின் மக்கள் தொகை அதிகரித்து வருகிறது என்றும் இதனால் இந்துக்களுக்கு பெரும் ஆபத்து என்றும் பாஜக மக்களிடம் பிரச்சாரம் செய்து வரும் நிலையில் 2011 ஜனத்தொகை புள்ளிவிபர கணக்கெடுப்பு அறிக்கையின்படி நாட்டில் உள்ள பிற சமூக மக்களைக் காட்டிலும் முஸ்லிம்களின் மக்கள் தொகை கடந்த 2001 முதல் 2011 வரையிலான காலகட்டத்தில் கணிசமாக குறைந்துள்ளது என்று தெரியவந்துள்ளது.

2001 ஆம் ஆண்டு காலகட்டத்தில் 36% ஆக இருந்த முஸ்லிம் மக்களின் ஜனத்தொகை 2011 ஆம் ஆண்டு 24.6% ஆக குறைந்துள்ளது. இது நாட்டின் மற்ற அனைத்து சமூக ஜனத்தொகையின் வளர்ச்சியை விட குறைவானதாகும்.

இந்து சமூக மக்களின் ஜனத்தொகை .7% வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இருந்தும் இந்த புள்ளிவிபர கணக்கீட்டின்படி, பாஜக கூறுவது போல இந்துமக்கள் ஜனத்தொகையை முஸ்லீம்கள் முந்துவதென்பது நடைமுறை சாத்தியமில்லாத ஒன்று என்றும், இதன்படி கற்பனையான ஒன்றை கூறி பெரும்பான்மை இந்து மக்களை அச்சமடையச்செய்து அதில் பாஜக அரசியல் இலாபம் தேட நினைப்பது தெளிவாகியுள்ளது.

Comments are closed.