முஸ்லீம் லீக்கின் பச்சை நிற வைரஸால் காங்கிரஸ் கட்சி பாதிப்பு- யோகி ஆதித்யநாத்

0

உத்தரபிரதேச மாநிலத்தில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தில உ.பி முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பேசியதாவது: நாடாளுமன்ற தேர்தலில் வயநாடு, அமேதி ஆகிய 2 தொகுதிகளில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போட்டியிடுகிறார். கடந்த வாரம் கேரளாவில் உள்ள வயநாடு தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்தார். அங்கு காங்கிரஸின் கொடிகளை விட முஸ்லிம் லீக் கட்சியின் பச்சை நிற கொடிகளே அதிகம் பறக்கவிடப்பட்டன. காங்கிரஸ் கட்சி கொடிகள் கண்களுக்கே தெரியாத அளவில் குறைவாகவே இருந்தன. காங்கிரஸ், முஸ்லிம் லீக் எனும் பச்சை வைரஸினால் பாதிக்கப்பட்டு உள்ளது என்று தெரிவித்து உள்ளார்.

Comments are closed.