முஹம்மது ஸலாஹ் காழ்ப்புணர்வைக் குறைக்கும் கால்பந்து நட்சத்திரம்!

0

முஹம்மது ஸலாஹ். இன்று கால்பந்து உலகம் முழுவதும் எதிரொலிக்கும் மந்திரப் பெயர் இதுதான். எகிப்து நாட்டைச் சார்ந்த முஹம்மது ஸலாஹின் நாமம் சொந்த நாட்டின் மூலை முடுக்குகளிலும், உணவு விடுதிகளிலும், தெரு வீதிகளிலும் ஒலித்துக்கொண்டிருக்கும் என்பதை சொல்லத் தேவையில்லை.

ஆம்! கால்பந்துக்கு அவ்வளவு சக்தி இருக்கிறதல்லவா? 25 வயதாகும் முஹம்மது ஸலாஹ் இன்று உலகப் புகழ் பெற்ற கால்பந்து நட்சத்திர வீரர். இவர் மைதானத்தில் இறங்கினால் “முஹம்மது ஸலாஹ்… முஹம்மது ஸலாஹ்” என்ற முழக்கத்தில் மொத்த அரங்கமும் அதிர்கிறது. ஆவேசமாக அவரை வரவேற்கிறது.

எகிப்து நாட்டு கால்பந்து அணியில் பங்கு பெற்றுள்ள முக்கிய வீரர்தான் முஹம்மது ஸலாஹ். எதிர்வரும் உலகக் கோப்பை கால்பந்துப் போட்டிக்கு எகிப்து தேர்வாகி விட்டது என்றால் அதற்கு முக்கிய காரணம் இந்த நட்சத்திர வீரர் என்றால் அது மிகையல்ல.

தற்போது ஐரோப்பாவின் லிவர்பூல் கால்பந்து கிளப்பில் சேர்ந்து போட்டிகளில் விளையாடி வருகிறார். அதுதான் இப்பொழுது உலக கால்பந்து ரசிகர்களையே இவர் பக்கம் ஈர்த்துள்ளது.

இவர் ஆடுகளத்தில் காண்பிக்கும் ஆவேசமும், மின்னல் வேக ஓட்டமும், நுணுக்கமான விளையாட்டுத் திறனும், மைக்ரோ நொடியில் கிடைக்கும் இடைவெளியைப் பயன்படுத்தி கோல் போடும் அழகும் காண்போரை பரவசத்தில் ஆழ்த்தி விடுகிறது. அவர் கோல் போட்டதும் ஒட்டுமொத்த அரங்கத்தினரும் தங்களையறியாமலேயே மெய்சிலிர்த்து எழுந்து நிற்கின்றனர். ஆவேசமாக அவருக்கு வாழ்த்துகளைப் பங்களிக்கின்றனர்.

கோல் போட்டதும் ரசிகர்கள் அருகில் ஓடிச் சென்று அவர்களை வாரியணைக்கும் விதமாக இரு கரங்களையும் விரித்து அவர்களின் வாழ்த்துகளை வாஞ்சையுடன் ஏற்றுக் கொள்கிறார் ஸலாஹ். அவர்களின் அன்பு மழையில் நனைந்து சிறிது நேரம் அசையாமல் நிற்கிறார்.

அவரின் சக அணியினரின் வாழ்த்துப் பரிமாற்றங்களுக்குப் பிறகு ஸலாஹ் மெதுவாக மைதானத்தின் நடுவட்டத்திற்கு வருகிறார். இரு கைகளையும் வானத்தை நோக்கி உயர்த்தி பிரார்த்திக்கிறார். அப்பொழுது ஒட்டுமொத்த மைதானமும் அவரைப் பார்த்து அப்படியே ஸ்தம்பித்து நிற்கிறது. பின்னர் அப்படியே முழங்காலிட்டு அமர்ந்து, பூமியில் தன் நெற்றியைப் பதித்து சாஷ்டாங்கத்தில் வீழ்கிறார். சாஷ்டாங்கத்தில் இறைவனுக்கு நன்றி தெரிவித்து அவர் எழுந்ததும் மீண்டும் ரசிகர்களிடமிருந்து பழைய ஆரவாரம் மைதானத்தை ஆட்கொள்கிறது. மீண்டும் ரசிகர்கள் அவரை வாழ்த்திப் பாடத் தொடங்குகின்றனர். … முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்கு இங்கு செல்லவும்

Comments are closed.