மூத்த பத்திரிகையாளரும் மனித உரிமை போராளியுமான கெளரி லங்கேஷ் சுட்டுக் கொலை

0

மூத்த பத்திரிகையாளர், சமூக ஆர்வலர், மனித உரிமை போராளி, பகுத்தறிவாளர், மதவாத அரசியலுக்கு எதிரானவர் என்று பல குணங்களை உடைய கெளரி லங்கேஷ் செவ்வாய் கிழமை இரவு 8 மணியளவில் பெங்களூருவில் உள்ள அவரது வீட்டில் வைத்து மர்ம நபர்களால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.

இவர் லங்கேஷ் பத்திரிக்கை என்ற ஒரு பத்திரிக்கையை நடத்தி வந்தார். இத்துடன் அவர் மேலும் பல பதிப்பகங்களையும் நடத்தி வந்தார். தனது எழுத்துக்களில் இந்துத்வாவையும் சாதிய மற்றும் மதவாத அரசியலையும் வன்மையாக அவர் கண்டித்து வந்தார். இவர் மனித உரிமை அமைப்பான NCHRO வின் முன்னாள் உறுப்பினர் ஆவார்.

இவர் மீது பாஜக இந்துத்வாவினர் பல அவதூறு வழக்குகளை தொடர்ந்து வந்தனர். கடந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அவர் மீது பாஜக எம்.பி. பிரஹ்லாத் ஜோஷி மற்றும் உமேஷ் துஷி தொடர்ந்த அவதூறு வழக்கு ஒன்றில் அவர் குற்றவாளி என்று நீதிமன்றம் தீர்ப்பளித்து அவருக்கு ஆறு மாத காலம் சிறை தண்டனையும் அபராதமும் வித்தித்து தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பு வந்த அதே நாளே அவர் பிணையில் வெளியானர்.

கருத்து சுதந்திரத்திற்காக எப்போதும் குரல் கொடுத்து வந்த இவர் பத்திரிகை ஒன்றிற்கு பேட்டியளிக்கையில் நாட்டில் தற்போதைய நிலையில் கருத்து சுதந்திரம் ஒடுக்கப்பட்டு வருகின்றது என்று தெரிவித்துள்ளார். மேலும் மக்கள் அவர்களின் கொலைகளுக்காக தாக்கப்படுவதை எதிர்த்தும் அவர் குரல் எழுப்பி வந்தார்.

கெளரி லங்கேஷின் கொலை குறித்து பிரபல கன்னட எழுத்தாளர் K.மருளிசிடப்பா கூறுகையில், “தபோல்கர், பன்சாரே மற்றும் கல்பர்கியை கொலை செய்த அதே கும்பல் தான் கெளரி லங்கேஷையும் கொலை செய்துள்ளது. அவர் சங் பரிவாரங்களுக்கு எதிராக மிக உறுதியான நிலையில் இருந்தார்.” என்று கூறியுள்ளார்.

இவரின் கொலைக்கு நாட்டின் பல முக்கிய பிரபலங்களும் பத்திரிகையாளர்களும் தங்களின் கண்டனத்தை தெரிவித்துள்ளனர். இத கொலையை கண்டித்து செவ்வாய் மாலை மூன்று மணிக்கு டில்லி பிரஸ் கிளப்பில் கண்டன கூட்டம் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. கெளரி லங்கேஷின் கொலையை கண்டித்து பெங்களூருவில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பும் போராட்டங்கள் நடத்த முடிவெடுத்துள்ளது.

தபோல்கர், பன்சாரே மற்றும் கல்பர்கி கொலைகளே இன்னும் தீர்க்கப்படாமல் அதன் குற்றவாளிகள் சுதந்திரமாக சுற்றித்திரியும் வேலையில் மற்றுமொரு இந்துத்வா எதிர்ப்பாளர் கொலை செய்யப்பட்டுள்ளது நாட்டில் கருத்து வேறுபாட்டிற்கு எதிரான போராக கருதப்படுகிறது.

Comments are closed.