மூத்த ஹமாஸ் தலைவர் படுகொலை!

0

டமாஸ்கஸ்: சிரியாவின் யர்முக் முகாமில் மூத்த ஹமாஸ் இயக்க தலைவர் யஹ்யா ஹவ்ரானி கொல்லப்பட்டதாக அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஹமாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பது:’யர்முக் அகதி முகாமில் உள்ள மருத்துவமனையில் கொல்லப்பட்ட உயிர் தியாகி யஹ்யா ஹவ்ரானிக்காக ஹமாஸ் துக்கத்தை அனுஷ்டிக்கிறது.அவர் மருத்துவமனையில் மனிதாபிமான கடமையை ஆற்றும்போது கொல்லப்பட்டார்.ஹவ்ரானி, மனிதாபிமான பணி மற்றும் நிவாரண பணிகளில் சுறு சுறுப்பாக இயங்கியவர்.நூற்றுக்கணக்கான மருத்துவ உதவியாளர்கள் மற்றும் நர்சுகளை பயிற்றுவிக்க உதவியவர்.’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜூலை, 2013 இலிருந்து இம்முகாமை சிரியா அரசு முற்றுகையிட்டதை தொடர்ந்து உணவு மற்றும் மருத்துவ உதவி கிடைக்காமல் கிட்டத்தட்ட 166 பேர் மரணித்துள்ளதாக மனிதநேய அமைப்பின் நண்பர்கள் குழு கடந்த மாதம் தெரிவித்திருந்தது.

கடந்த மார்ச் 2011-ஆம் ஆண்டு சிரியாவில் புரட்சி வெடித்ததை தொடர்ந்து புரட்சியாளர்களுக்கு எதிரான சிரியா அரசை ஹமாஸ் ஆதரிக்க மறுத்ததால் அதிபர் பஷர் அல் அஸத் மற்றும் ஹமாஸ் இடையேயான உறவு சீர்குலைந்தது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.