மூன்று பள்ளிவாசல்களை கொடுத்துவிட்டு 39997 பள்ளிவாசல்களை வைத்துகொள்ளுங்கள் – சுப்ரமணிய சுவாமி

0

பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவரான சுப்ரமணிய சுவாமி சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவிப்பதில் புகழ் பெற்றவர். ராமர் கோவில் குறித்து நேற்று அவர் மீண்டும் ஒரு சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அதில் மூன்று பள்ளிவாசல்களை கொடுத்துவிட்டு 39997 பள்ளிவாசல்களை வைத்துகொள்ளுங்கள் என்று அவர் கூறியுள்ளார்.

“We Hindus offer Lord Krishna’s package to Muslims–give us 3 temples and keep 39,997 masjids. I hope Muslim leaders don’t become Duryodhans,”

இதற்கும் மேலாக அயோத்தியில் ராமர் கோவில் கட்ட எதிர்ப்பு தெரிவிப்பவர்களை சகிப்பு தன்மையற்றவர்கள் என்றும் சுவாமி குற்றம் சாட்டியுள்ளார்.

அவரது இந்த கருத்து பல தரப்பில் இருந்தும் பலத்த எதிர்ப்பை பெற்றுவருகிறது. குஜராத்தின் முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரியும் மோடி அரசால் பதவி நீக்கம் செய்யப்பட்டவருமான சஞ்சீவ் பட் இது குறித்து கருத்து தெரிவிக்கையில் “We Hindus” என்று சுவாமி யாரை குறிப்பிடுகிறார் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் இது குறித்து கருத்து தெரிவித்த உத்திரபிரதேச சிறுபான்மையினர் முனேற்ற அமைச்சர் அசாம் கான் கூறுகையில் “சுவாமியின் இந்த சலுகை எங்களுக்கு தேவை இல்லை என்றும், வேண்டுமென்றால் ஆவர் அனைத்து பள்ளிவாசல்களையும் எடுத்துகொள்ளட்டும். அதில் அவர் தொழுகை புரியட்டும்” என்று அவர் கூறியுள்ளார். மேலும் “சுவாமி பள்ளிவாசல்களில் தொழுகை புரிவதை யாரும் தடுக்கப்ப போவதில்லை என்றும் நாங்கள் அவரை அழைக்கின்றோம்” என்று அவர் கூறியுள்ளார்.

Comments are closed.