மூன்று வருடங்களில் 32% அதிகரித்த அதித்யனாத்தின் சொத்துக்கள்

0

உத்திர பிரதேச முதல்வர் அதித்யனாத்தின் சொத்து மதிப்பு கடந்த மூன்று வருடங்களில் 32% அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது. இது வருகிற உத்திர பிரதேச கவுன்சில் இடைத்தேர்தலையொட்டி அவர் அளித்த அஃபிடவிட் மூலம் தெரிய வந்துள்ளது.

இதன் படி இவருடைய தற்போதைய சொத்து மதிப்பானது 95,98,053 ரூபாய்களாக உள்ளது, இது 2014 ஆம் ஆண்டு அவர் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட போது 72, 17, 674 ரூபாய்களாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த மூன்று ஆண்டுகளில் அதிகரித்துள்ள 23.80 லட்சங்கள் இவரின் சொத்து மதிப்பில் 32% ஆகும்.

அதித்யனாத்தின் இந்த சொத்துக்களில் தங்கத் தோடு மற்றும் தங்க ருத்திராட்சை மாலை, ஒரு கைத்துப்பாக்கி மற்றும் ஒரு ரைய்ஃபில் ஆகியன அடக்கம். தான் மக்களவை உறுப்பினராக இருப்பதன் மூலம் தனக்கு கிடைக்கும் ஊதியம் மற்றும் சலுகைகள் தான் தனது வருமானத்தின் ஒரே மூதாலாரம் என்று அதித்யநாத் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

அதித்யனாத்துடன் அஃபிடவிட் தாக்கல் செய்த கேஷவ் பிரசாத் மெளரியா தனக்கு 72.94 லட்ச ரூபாய் மதிப்பிலான அசையும் சொத்து மற்றும்  6.85 கோடி ரூபாய் மதிப்பிலான அசையா சொத்து இருப்பதாக தெரிவித்துள்ளார். மற்றொருவரான தினேஷ் ஷர்மா தனக்கு 66.70லட்சம் மதிப்பிலான அசையும் சொத்து மற்றும் 2.26 கோடி ரூபாய் மதிப்பிலான அசையா சொத்து இருப்பதாக தெரிவித்துள்ளார். இந்த இருவரும் தங்களிடம் துப்பாக்கிகள் வைத்துள்ளனர்.

Comments are closed.