மேற்கு வங்கத்தில் ஃபேஸ்புக் பதிவினால் ஏற்பட்ட பதற்றம் – போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி

0

இறைத்தூதரை தவறாக சித்தரிக்கும் ஒரு ஃபேஸ்புக் பதிவினால் மேற்கு வங்காளத்தின் பிர்பம் மாவட்டத்தில் உள்ள இல்லம்பசார் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கடந்த சனிக்கிழமை பதியப்பட்ட இந்த பதிவு பகிரப்பட்டதாக கூறப்படுகிறது. ஒரு காவல் நிலையம் சூறையாடப்பட்டது. காவல்துரையினாரால் ஒரு பள்ளிவாசல் தாக்கப்பட்டதாகவும் செய்திகள் வருகின்றன.

இந்த பதிவை தொடர்ந்து காவல்துறையினர் ஒரு பள்ளிவாசல் உள்ளே சென்று தாக்குதல் நடத்தியுள்ளனர். அதனை அடுத்து நடந்த போராட்டங்களில் ரெசாவுல் இஸ்லாம் என்கிற இளைஞர் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டார். இவர் NH60 தேசிய நெடுஞ்சாலையை முடக்க முயற்சிகள் செய்ததாக கூறப்படுகிறது. கூட்டத்தை கலைக்க நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் ஒரு குண்டு ரெசா தலையில் பாய்ந்து சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்ததாக காவல்துறை கூறுகிறது.

இந்த சம்பவத்திற்கு காரணமான ஃபேஸ்புக் பதிவை பகிர்ந்தவர் சுஜன் முகர்ஜி. துர்காபூர் பகிதியில் உள்ள இஞ்சினியரிங் கல்லூரியில் கம்பியுட்டர் தொழில்நுட்பத்தில் மூன்றாம் ஆண்டு பயின்று வருகிறார். இவரை இல்லம்பசார் பகுதி காவல்துறையினர் திங்கள் இரவு கைது செய்தனர். பின்னர் அவர் 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டார். இவர் கைது செய்யப்பட்ட நேரம் இவரது பதிவு மிக வேகமாக பரவி போராட்டத்திற்கு வழிவகுத்தது.

இந்த பதிவை தொடர்ந்து நடத்தப்பட்டதாக கூறப்படும் வன்முறைகள் குறித்து அப்துல் கலாம் என்பவர், அப்பகுதி மக்கள் காவல் நிலையத்தை தாக்கினர் என்பதை முற்றிலுமாக மறுத்தார். மேலும் காவல் நிலையத்தை தாக்கியவர்கள் வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் என்றும் தேர்தல் வர இருப்பதால் இந்த தாக்குதலை காரணம் காட்டி பிரிவினையை உண்டுபண்ணும் நோக்கில் அவர்கள் அதனை செய்துள்ளனர் என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும் காவல் துறையினர் பகபதிபூர் பஜார் பள்ளிவாசலில் நுழைந்து அஸர் தொழுகை தொழுது கொண்டிருந்தவர்கள் மீது தாக்குதல் நடத்தினர் என்றும் அப்பகுதி மக்கள் தெரிவிகின்றனர். இந்த குற்றச்சாட்டை காவல் துறை மறுத்துள்ளது.

மொநிருல் இஸ்லாம் என்பவர் கூறுகையில், “பள்ளிவாசலில் அஸர் தொழுகை நடைபெற்றுக்கொண்டிருந்த நேரத்தில் காவல்துறையினர் பள்ளிவாசலில் நுழைந்தனர். இது வன்முறையை ஆதரிக்காத புனிதமான இடம், ஆனால் அவர்கள் பள்ளிவாசலில் நுழைந்து அங்கு தொழுது கொண்டிருந்தவர்களை வெளியே இழுத்துச் சென்று தாக்கினர்” என்று கூறியுள்ளார்.
பள்ளிவாசல் மீது காவல்துறையினர் நடத்தியாக கூறப்படும் இந்த தாக்குதல் இந்த போராட்டத்தை மேலும் விரிவடைச் செய்தது. ரெசா துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட NH60 தேசிய நெடுஞ்சாலை மற்றும் சுஜன் முகர்ஜியின் வீடு ஆகியா இடங்களில் போராட்டம் வெடித்தது.

சுஜன் முகர்ஜியின் மாமா அனிர்பன் முகர்ஜி கூறியதாவது “எங்களுக்கு என்ன நடக்கிறது என்றோ, ஏன் இந்த வன்முறை என்றோ எதுவும் தெரியவில்லை. ஆனால் ஒரு கூட்டம் சுஜன் வீட்டை சூழ்ந்துகொண்டு கற்களை வீசத்தொடங்கினார். கதவுகளை உடைத்தனர். நாங்கள் எங்கள் வீடுகளும் தாக்கப்படும் என பயந்தோம்.ஆனால் எங்கள் வீடுகளை அவர்கள் எதுவும் செய்யவில்லை. சுஜனின் வீட்டை மட்டும் தாக்கினர். தாக்குதல் நடந்த சமையத்தில் அங்கு யாரும் இல்லை” என்று கூறியுள்ளார்.

தற்போது அப்பகுதியில் நிலைமை கட்டுக்குள் இருக்கிறது என்றும் கால்வல்துரையினர் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர் என்றும் எஸ்.பி.குமார் தெரிவத்துள்ளார்.

Comments are closed.