மேற்கு வங்கத்தில் ஜெய் ஸ்ரீராம் கூற சொல்லி இஸ்லாமியர் மீது மீண்டும் கொடூர தாக்குதல் நடத்திய இந்துத்துவா வெறியர்கள்

0

மேற்கு வங்கத்தில் ஜெய் ஸ்ரீராம் என கூற சொல்லி  மதரஸா ஆசிரியர் மீது இந்துத்வா வெறியர்கள் கொடூர தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.

இதுகுறித்து பாதிக்கப் பட்ட மதரஸா ஆசிரியர் முஹம்மது ஷாரூக் ஹால்டர் (24) கூறுகையில், ” நான் வழக்கம் போல் வியாழக்கிழமை அன்று ஹூக்லியில் உள்ள மதரஸாவுக்கு ரெயிலில் பயணம் மேற்கொண்டேன். அப்போது தக்கூரியா ரெயில் நிலையத்தில் ரெயில் நின்றபோது. ஏராளமான கும்பல் அந்த ரெயிலில் பலவிதமான கோஷங்களுடன் உள்ளே நுழைந்தது. அப்போது என்னை பார்த்து வந்த கும்பல் என் தாடியை பிடித்து இழுத்து, ஏன் தொப்பி போட்டிருக்கிறாய்? அதனை கழட்டு, என்று கூறியது. மேலும் ஜெய் ஸ்ரீராம் என கூற வலியுறுத்தியது.

ஆனால் நான் ஜெய் ஸ்ரீராம் கூற மறுத்தேன். உடனே என்னை கடுமையாக தாக்கத் தொடங்கியது அந்த கும்பல். அப்போது அங்கிருந்த சில பயணிகள் என்னை அவர்களிடமிருந்து காப்பாற்றினர். பிறகு டோப்சியா போலீஸ் ஸ்டேனில் இதுகுறித்து புகார் அளித்தும் இதுவரை அந்த வன்முறை வெறியர்கள் மீது வழக்கு எதுவும் பதிவு செய்யப் படவில்லை” என்றார்.

சமீப காலமாக முஸ்லிம்கள் மீதான தாக்குதல் அதிகரித்து வருகிறமை கவலையை ஏற்படுத்தியுள்ளது

Comments are closed.