மேற்கு வங்கத்தில் தொடரும் வன்முறை: பாஜக நடத்திய 12 மணி நேர பந்த்!

0

மக்களவைத் தேர்தலின் போது மேற்குவங்கத்தில், பாஜகவினருக்கும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினருக்கும் இடையே ஏற்பட்ட வன்முறை மோதல்களால், கலவராமாக வெடித்தது. தேர்தல் தொடர்பான முன்விரோதத்தால் 4 பேர் கொல்லப்பட்டதால் மேற்கு வங்கத்தில் பதற்றம் தற்போது வரை நிலவுகிறது. இந்த வன்முறை சம்பவத்த்திற்கு மேற்கு வங்க ஆளுநர் கேசரிநாத் திரிபாதி கண்டனம் தெரிவித்துள்ளார். தேர்தல் முடிந்த பிறகும் மேற்குவங்கத்தில் வன்முறை தொடர்வது கவலை அளிப்பதாகவும், இதை தடுக்க தீவிரமான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மாநில அரசுக்கு, மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.

இதனையடுத்து மேற்குவங்க தலைமைச் செயலாளர், மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் உள்ளது என மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு கடிதம் எழுதியுள்ளார்.

இந்த கலவரத்தால் மேற்குவங்கத்தில் கருப்பு நாளாக அனுசரித்து நேற்று 12 மணி நேர முழு அடைப்பு போராட்டத்திற்கு பாஜகவினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

Comments are closed.