மேற்கு வங்கத்தில் பசுவை திருடியதாக கூறி மூன்று பேர் அடித்துக்கொலை

0

முஸ்லிம்களை ஏதேனும் ஒரு காரணம் கூறி அடித்துக் கொல்வது இந்தியாவில் இன்று அன்றாட நிகழ்வு போல் ஆகிவிட்டது. ஈத் பெருநாளைக்காக புத்தாடை வாங்கச் சென்ற சிறுவனை ஒரு கும்பல் மாட்டிறைச்சி உண்டதாக கூறி கத்தியால் குத்திக் கொலை செய்தது.(பார்க்க செய்தி). இந்நிலையில் கடந்த மேற்கு வங்கம் தினாஜ்பூர் மாவட்டத்தில் உள்ள இஸ்லாம்பூர் பகுதியில் மூன்று முஸ்லிம்கள் பசுக்களை திருடியதாக குற்றம் சுமத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளனர்.

சமீருதின் ஹக், நசீருல் ஹக் மற்றும் நசிர் ஹக் ஆகியோர் சோனாப்பூர் என்ற கிராமத்தில் வைத்து ஒரு கும்பலால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

காவல்துறையினரின் கூற்றுப்படி, சோனாப்பூர் கிராமத்தில் சுமார் ஒரு 15  பேர் நுழைவதைக் கண்ட அப்பகுதி மகள் அவர்களை பசு திருடர்கள் என்று கருதி அங்கிருந்தவர்களை கூச்சலிட்டு அழைத்துள்ளனர். இவர்கள் சந்தேகித்ததற்கு ஏற்றால் போலவே அந்த நபர்கள் இருத்த பகுதிக்கு அருகே மாட்டு கொட்டகை ஒன்று இருக்க இந்த மக்களின் கூச்சல் கேட்டு அவர்கள் அங்கிருந்து ஓடியுள்ளனர்.

ஆனால் சமீருதின், நசீருல் மற்றும் நசிர் ஆகியோரால் அந்த கூட்டத்திடம் இருந்து தப்ப முடியவில்லை. இந்த மூவரை பிடித்த அந்த கும்பல் அவர்களை கடுமையாக தாக்கி அவர்களை ரத்த வெள்ளத்தில் மிதக்கவிட்டுச் சென்றுள்ளது.

காவல்துறையினர் அப்பகுதிக்கு செல்லும்போது இவர்கள் மூவரும் ரத்த வெள்ளத்தில் கிடந்ததை கண்டுள்ளனர். இதனையடுத்து இவர்களை அருகில் உள்ள மருத்துவமனைக்கு காவல்துறையினர் எடுத்துச் செல்ல, அங்கு அந்த மூவரும் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என்று கூறப்பட்டுள்ளது. இவர்களின் உடல் இஸ்லாம்பூர் மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்த கொலை குறித்து விசாரணை துவக்கப்படுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் கொல்லப்பட்ட மூவரின் குடும்பத்தினருக்கு இது குறித்து தகவல் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் உயிரிழந்த மூவரும் பசு திருட்டில் ஈடுபட்டனரா என்பது குறித்தும் விசாரிக்கப்படும் என்றும் காவல்துறை அவர்களது குடும்பத்திடம் தெரிவித்துள்ளது.

இந்த சம்பவத்தில் கொலை செய்யப்பட்ட நசீருல் ஹக்கின் தாய் மும்தாஜ் பீவி சோப்ரா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் தற்போது மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஏலும் சட்டத்தில் தங்கள் கைகளில் எடுக்கும் எவர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்த பகுதியில் பசுத்திருட்டு மிக அதிகம் என்று கூறப்படுகிறது. இந்த மூவரை அடித்துக் கொன்ற கும்பலும் இரவு ரோந்துப் பணியில் இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் இவர்கள் பசு திருட்டில் ஈடுபட்டனரா இல்லையா என்பது குறித்து தற்போது எந்தத் தகவலும் இல்லை என்றும் அது குறித்து எதுவும் கூற இயலாது என்று காவல்துறை தெரிவித்துள்ளனர்.

Comments are closed.