பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சியினர் ஒன்றிணைய வேண்டும்: மம்தா பானர்ஜி

0

மேற்கு வங்கத்தில் எதிர்க்கட்சியினர் ஓரணியில் திரண்டு பாஜகவை வீழ்த்த வேண்டும் என மம்தா பானர்ஜி வலியுறுத்தியுள்ளார்.

மேற்கு வங்கத்தில் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக இரண்டு தொகுதிகள் மட்டுமே வெற்றி பெற்றது. ஆனால் தற்போது நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக 18 தொகுதிகளில் வெற்றி பெற்று, அனைவருக்கும்  ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

பாஜக 18 தொகுதிகளில் வெற்றிபெற்றது, அம்மாநிலத்தில் ஆட்சியில் இருக்கும் மம்தா பானர்ஜியின் திருணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு பெரும் அதிர்ச்சியை அளித்தது. மேலும், மம்தா பானர்ஜிக்கும் மோடிக்கும் இடையே சமீபகாலமாக மோதல் போக்குகளும் நிலவி வருகிறது.

இந்நிலையில், வரக்கூடிய சட்டமன்ற தேர்தலில் அனைத்து எதிர்க்கட்சியும் ஓன்றிணைந்து பாஜகவை வீழ்த்த பணியாற்ற வேண்டும் என்று மம்தா பானர்ஜி வலியுறுத்தியுள்ளார்.

Comments are closed.