மேற்கு வங்கத்தில் பா.ஜ.க. தலைவரின் மிரட்டல் பேச்சு

0

மேற்கு வங்கத்தில் மம்தா பேனர்ஜி ஆட்சி அமைத்ததற்கு பின் மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி மேற்கு வங்கத்தில் அமைதியும் நல்லிணக்கமும் நிலவும் என்றும் மத்திய அரசு மம்தா பேனர்ஜி அரசுக்கு ஒத்துழைக்கும் என்றும் கூறியிருந்தார். ஆனால் இப்பொழுதே மேற்கு வங்க பா.ஜ.க மாநிலத் தலைவர் திலிப் கோஷ் வெறுப்புப் பிரசாரத்தில் ஈடுபட தொடங்கிவிட்டார். திரினாமுல் காங்கிரஸ் கட்சியினருக்கு மிரட்டல் விடுத்த அவர் அக்கட்சி தலைவர்களை அவர்கள் வீட்டில் வைத்தே அடித்துக் கொள்வோம் என்று கூறியுள்ளார்.

சனிக்கிழமையன்று ஒரு பேரணியில் பேசிய திலிப் கோஷ், நடந்து முடிந்த தேர்தலில் தங்கள் கட்சி வெறும் மூன்று இடங்களை மட்டுமே ஜெயித்திருந்தாலும் திரினாமுல் காங்கிரஸ் கட்சிக்கு கடினமாக சவால்களை தங்களால் கொடுக்க முடியும் என்று கூறியுள்ளார். தேவைபட்டால் திரினாமுல் காங்கிரஸ் கட்சியினரை அவர்கள் வீட்டில் வைத்தே அடித்துக் கொல்ல மேற்கு வாங்க பா.ஜ.க வினரால் முடியும் என்றும் திரினாமுல் காங்கிரஸ் கட்யினர் தங்களால் முடிந்ததை பார்துகொள்ளட்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

ஆர்.எஸ்.எஸ். அமைப்பினரால் எந்த எல்லை வரையும் செல்ல முடியும் என்று கூறிய அவர், ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் தங்கள் வெறும் கைகளாலேயே திரினாமுல் காங்கிரஸ் கட்சியினரின் கழுத்தை உடைக்கும் வல்லமை பெற்றவர்கள் என்று அவர் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் கூறும் போது “நாங்கள் மூன்று இடங்களில் தான் ஜெயித்துள்ளோம், ஆனால் உங்களுக்கு சவால்விட இதுவே போதும். உங்களுக்டைய மின்சாரம் மற்றும் குடிநீர் இணைப்பை துண்டித்து உங்கள் வீடுகளில் வைத்தே உங்களை அடித்து கொன்றுவிடுவோம். அவர்களால் (திரினாமுல் காங்கிரஸ் கட்சியினரால்) என்ன செய்ய முடியும் என்று பார்க்கலாம். ஆர்.எஸ்.எஸ். இன் பயிற்சி வெறும் கைகளாலேயே கழுத்தை உடைக்கும் சக்தியை கொடுத்துள்ளது” என்று கூறியுள்ளார்.

இத்தகைய பேச்சு பஜ்ரங்தள் உறுப்பினர்கள் ஆயுத பயிற்சி எடுத்து சில நாட்களில் வெளியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.